வில்வா தமிழ் ஆடைகள் பற்றி புதிய தலைமுறை நாளிதழில் வெளிவந்த செய்தி‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று ஒரு பழமொழி தமிழில் உள்ளது அதற்கு ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவனது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்துகாட்டும் என்பது பொருள் ஒருவன் அணிந்து இருக்கும் ஆடையே அவனை அடையாளம் காட்டும். அஃதினை அடையாளம் கொண்டு தான் பண்டைய காலத்தில் அவன் எந்த நாட்டைச் சார்ந்தவன், எந்தச் சமயத்தைச் சார்ந்தவன், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவன் என்பன போன்றவற்றை அறிந்தனர். அதோடு மட்டுமல்லாமல், ஒருவன் அணியும் ஆடையும் ஒருவனது பண்பாட்டை வெளிப்படுத்தும். அவன் நாகரித்தையும் அவனது கலாச்சாரத்தையும் வெளிக்கொணரும். அவ்வாறு நம் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் வெளிக்கொணர தமிழ் ஆடைகள் பெரிதும் உதவி வருகின்றன.

 

"பாரெங்கும் தமிழ் ஓசை இனிக்க"

 

"அனைவரும் தங்களை

தனித்துக் காட்டவே விரும்புகின்றனர்"

 

இன்றைய தலைமுறை இளைஞர்கள் தன்னை எதிலும் தன்னை வித்தியாசப்படுத்தி காண்பிக்கவே விரும்புகின்றனர், அவர்களுக்கு உரித்த வாழைப்பழம் போல் கிடைத்தது தமிழ் ஆடைகள், அதிலும் வள்ளுவர், பாரதி போன்ற தலைநிமிர்ந்த தமிழர்களின் உருவங்கள், புகழ்பெற்ற வரிகளான அச்சம் தவிர், வீழ்வேனென்று நினைத்தாயோ, ரௌத்திரம் பழகு அழகுற ஆடைகளாக சிறந்த தரத்தில் திருப்பூரில் தயாரித்து "பாரெங்கும் தமிழ்" என்பதனை மெய்ப்பிக்க சிறு முயற்சியில் நம் வில்வா தமிழ் ஆடைகள் செயலாற்றி வருகிறது. புத்தம் புது முயற்சி, தொடங்கிய முதல் ஆண்டிலேயே நல்ல வரவேற்பு வாடிக்கையாளர்களிடம் மற்றும் தொழில் போட்டியாளர்களிடமும், வாடிக்கையாளர்கள் புதிய வரவுகளை வாங்க முற்பட்டனர், போட்டியாளர்களோ நகலெடுக்க(copy) முற்பட்டனர், என்னதான் வடிவத்தை காப்பி செய்தாலும் தரத்தில் முடியாததால் இன்றும் வில்வா தமிழ் ஆடைகள் விற்பனையக வரிசையில் முதலில் உள்ளது. இதற்கு முக்கியப் பங்கு வகிப்பது நமது இணையதளம் www.tamiltshirts.in. இன்று தனக்கென தனி வாடிக்கையாளர் மட்டும் சுமார் 6000+ மேல் கொண்டுள்ளது வில்வா குழுமம். இதற்கு முக்கிய பங்கு தரத்தில் செலுத்தும் நேரமே ஆகும், தரத்தை மேலும் மேலும் பரிசோதித்த பின்னரே வாடிக்கையாளர் கையில் கிடைக்க வழி செய்யப்படுகிறது.

 

 

நன்றி: புதிய தலைமுறை