Raja Sundaram
திரைப்படபாடல்களில் சங்க இலக்கியம்
சமீப "#அவளும் நானும் அலையும் கடலும் " பாரதிதாசன் வரிகளை 'அச்சம் என்பது மடமையடா'வில் ரசித்து முடிக்கும் முன்பே ,ரஹ்மான் அசத்தியிருக்கும் "காற்று வெளியிடை படத்தில் "நல்லை அல்லை" வரிக்கு என்ன அர்த்தம் என்று தேட தொடங்கி கிடைத்த குறுந்தொகை பாடல் "கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும் காட்டிடை எல்வி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே". தலைவன் வருகையை ஊரார் அறிந்து கொள்ள ஏதுவாக ஏன் இவ்வளவு எரிக்கிறாய்? என நிலவை பார்த்து தலைவி ஊடல் கொள்ளுவது .
#நல்லை அல்லை =நன்மை தருவதாய் இல்லை" .
பெண் பிள்ளைகளுக்கு தன் தந்தையை பிடிக்க இது தான் காரணமா?
புத்தி = நல்லதா/கெட்டதா (True or False)
மனம் = பிடிச்சிருக்கா பிடிக்கலையா (Yes or No)
அதாவது புத்தி என்பது நல்லதா கெட்டதா என்று மட்டும் பார்க்கும், அதேபோல மனம் என்பது பிடிச்சிருக்கா பிடிக்கவில்லையா என்று மட்டும் பார்க்கும்.
பிடித்ததா பிடிக்காததா என்பது குறித்து புத்தி கவலை கொள்ளாது, நல்லதா கெட்டதா என்பது குறித்து மனம் கவலை கொள்ளாது.
காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்
கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். அப்படி உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.