Tamil Decryption
திரைப்படபாடல்களில் சங்க இலக்கியம்
சமீப "#அவளும் நானும் அலையும் கடலும் " பாரதிதாசன் வரிகளை 'அச்சம் என்பது மடமையடா'வில் ரசித்து முடிக்கும் முன்பே ,ரஹ்மான் அசத்தியிருக்கும் "காற்று வெளியிடை படத்தில் "நல்லை அல்லை" வரிக்கு என்ன அர்த்தம் என்று தேட தொடங்கி கிடைத்த குறுந்தொகை பாடல் "கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும் காட்டிடை எல்வி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே". தலைவன் வருகையை ஊரார் அறிந்து கொள்ள ஏதுவாக ஏன் இவ்வளவு எரிக்கிறாய்? என நிலவை பார்த்து தலைவி ஊடல் கொள்ளுவது .
#நல்லை அல்லை =நன்மை தருவதாய் இல்லை" .
நம் அன்றாட வாழ்வில் ஆங்கிலத்திற்கு மாற்றாக தமிழ் சொற்கள் !
இதற்கு முந்தைய பதிப்பில் நாம் நமது தினசரி உணவு முறையில் பயன்படுத்திய ஆங்கில சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லை அறிந்தோம். இந்த பதிப்பில் மேலும் ஒரு படிச் சென்று இன்று உலக அளவில் அனைத்து மொழியினராலும் பயன்பாட்டில் இருந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப செயலிகளாக விளங்கும் WhatsApp, Messenger, Wifi போன்றவற்றிற்கான தனி தமிழ் சொற்கள் 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதியில் மலேசியா நாட்டில் நடைபெற்ற 9-வது தனித் தமிழியக்க மாநாட்டில் நுட்பவியல் கலைச் சொற்கள் தமிழில் வெளியிடப்பட்டது.
ஓரெழுத்தில் எத்தனை அர்த்தங்கள் - அமுது தமிழில்
தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு !
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு