வாடிக்கையாளர்கள் வில்வாவை பாராட்டிய தருனங்கள்


ஒரு தொழில் செய்யும் பொழுது அதில் வரும் வருமானத்தின் அளவை வைத்து தொழிலின் வளர்ச்சியை மதிப்பிடுவது முட்டாள்தனம். வாடிக்கையாளர்களின் சந்தோஷங்களும், நம்பிக்கையும் தான் ஒரு தொழிலின் வளர்ச்சியை முடிவு செய்யும். அப்படி எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை பற்றி கூறிய நன்மையும் தீமையும் பற்றிய ஒரு சிறு உரையாடல் தான் இந்த தொகுப்பு.

2017 - ம் ஆண்டு அனைவருக்கும் போல் வில்வா தமிழ் ஆடைகள் குழுமத்திற்கும் சில ஏற்ற இறக்கங்களுடன் மிக மிக நல்ல வருடமாமே அமைந்தது. நமது ஆரம்பக்கால வடிவமான "தீதும் நன்றும் பிறர் தர வாரா" எனும் கூற்று மெய்ப்பிப்பதை கண்ணூடே வில்வா கண்டது, பற்பல நல்ல எண்ணங்களின் வெளிப்பாட்டில் பல அருமையான வாடிக்கையாளர்கள்/நண்பர்கள் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி, எங்களை போலும் எங்களை விடவும் தமிழ் மொழி ஈடுபாட்டில் உச்சத்தில் இருந்த பலரது தமிழ் ஆர்வத்தை காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி. அப்பெரும் மகிழ்ச்சியின் சிறு வெளிப்பாடாய் நமது வாடிக்கையாளர் பட்டியலில் மனம் கவர்ந்த பலர் இருக்க, வெகு சிலரை பற்றியும் அவர்களது அப்பெரும் மகிழ்ச்சியின் சிறு வெளிப்பாடாய் நமது வாடிக்கையாளர் பட்டியலில் மனம் கவர்ந்த பலர் இருக்க, வெகு சிலரை பற்றியும் அவர்களுடனான சிறிய நேர்காணலை பதிக்க எடுத்த முயற்சியே இப்பதிவு.


திரு. தமிழ் பாரதன்:

kamarajar tamil tshirts in srilanka

தமிழ் பாரதன், இவரை பற்றி கூற பல இருந்தும் எங்களது முதல் அனுபவத்தை கூறவே ஏனோ என் மனம் ஆசை கொள்கிறது. முதல் சந்திப்பு அக்டோபர் - 6 பேருந்துகள் பல சத்தம் இடையே அலைபேசியில் அவரை தேடியவாறே கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தின் கடைக்கோடியில், அண்ணா கேட்ட காமராசர் ஆடைக்கு பதில் வேறு ஆடை தவறாக அனுப்பி, அதனை மாற்றி தருவதே எங்கள் முதல் சந்திப்பு, என்ன திட்டப்போகிறார் என்கிற அச்சம் கலந்த பார்வையில் அவரை காண, அவரோ சிரித்த முகத்துடன், சற்றும் கோவம் கொள்ளாமல், அளவு சரியாக உள்ளதா என சரிபார்த்து பின் காமராசர் ஆடையுடன் விடைபெற்றார். அவருடனான சிறு வினாவிடை அவர் சார்பாக,

"நான் தமிழ் பாரதன், 22 முறை சூரியனைச் சுற்றியவன். திருவாரூரில் பிறந்தவன், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மாணவன்.

மக்கள் மனதில் என்றும் வாழும் தமிழக முதலமைச்சர் திரு. காமராசர் உருவம் பொறித்த ஆடையே வில்வாவில் நான் வாங்கிய முதல் ஆடை."

'வில்வா'வின் தரம் பற்றி?

மக்கள் மனதில் என்றும் வாழும் தமிழக முதலமைச்சர் திரு. காமராசர் உருவம் பொறித்த ஆடை இன்றளவும் உடுத்த சிறப்பாக உள்ளது. சில நிறுவன ஆடைகளில் இடம்பெற்றுள்ள படங்கள், எழுத்துகள் சிலசமயம் துவைக்கும்போது, அழிவதற்கான வாய்ப்பிருக்கும். ஆனால், வில்வா நிறுவன ஆடையில் இதுவரை அப்படியேதும் நிகழவில்லை. ஏனெனில், தமிழ் வசனங்களுடன் நாம் உடை அணிகிறோம். அதில் ஏதேனும் ஒரு எழுத்தில் ”உரு” மாற்றம் வந்தால் கூட அது மிகப்பெரிய பொருள் மாற்றத்திற்கு வித்திடும். ஆக, நல்ல தரமான ஆடை வடிவமைப்பிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

tamil-language-in-sri-lanka-native

"திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கார்காலப் பருவத்தில் "

நான் ஜுலை 15 காமராசர் பிறந்தநாளுக்குத் தான் காமராஜர் ஆடை பதிவு செய்திருந்தேன். ஆனால், Being தமிழன் என்ற ஆடையே அனுப்பப்பட்டிருந்தது. இது போன்ற சிறு கவனக்குறைவுகளை சரிசெய்வது அவசியம் என எண்ணுகிறேன்.
இதுவரை உள்நாட்டு அயல்நாட்டு ஆடைகள் உடுத்தியிருக்கிறேன். சிறுபிள்ளையில் சில கால்சட்டை (Trouser) அணியும் போது, US Army போன்று இருக்கும். வேறு சில அயல்நாட்டு திரைநட்சத்திரங்கள், சுற்றுலாத் தலங்கள், அந்நாட்டுத் தத்துவங்கள் எல்லாம் இருக்கும். ஆனால், தமிழ் மொழியில் அதுபோல இல்லையென்ற ஏக்கத்தை நிறைவு செய்வதாக இருந்தது முதல்முறை தமிழ் ஆடை அணியும் போது.
tamil-bharathan-in-srilanka-with-kamarajar-t-shirt

"இலங்கையில் தமிழ் மொழி பற்றிய கலந்துரையாடலில் வென்ற தருணத்தில்"

பொதுவெளியில் காமராஜர் ஆடைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தங்களை படித்தவர்களாக உணர்ந்த(!) சிலர் இந்த மாதிரி ஆடை அணிந்து இவன் சீன் காட்டிக்கொள்கிறான் என்று என் செவிக்கு எட்டாத தூரத்தில் பேசியது பின்னர் தெரியவந்தது. மேனாட்டு ஆடைகளே உயர்ந்ததென்று கருதும் அவர்களைப் பார்க்கையில் பரிதாபமே கிட்டியது. இருப்பினும், நான் பல மாநில மாணவர்கள் உடன் பயில்கிறேன் என்பதால், "பிற மாநில மாணவர்கள் உண்ணும் போதும், செல்லும் போதும், கலந்துரையாடலின் போதும், என்னை நிறுத்தி யார் இவர்?, இதுல என்ன எழுதிருக்கு? என்று கேட்டனர்., கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிறமொழி மாணவர்களிடம் காமராஜரையும் அவர்தம் வாசகத்தையும் இந்த ஆடை வழி கொண்டு சேர்த்தது மகிழ்ச்சியே".

மெய்சிலிர்த்த தருணம் பற்றி?

தமிழ் ஆடையை நானும் அணிந்து இருக்கும் தருவாயில், குறிப்பாக 40 வயதைக் கடந்த ஆண்கள், 60 வயதைக்கடந்த பெண்கள் நிற்கவைத்து நிறைய கேள்விகள் கேட்பார்கள். இப்ப ”தமிழ்லெல்லாம் டிஷர்ட் வருதா ?” பரவாயில்லையே. அதில் எழுதப்பட்ட வரி என்னவென்று நிதானமாக வாசித்து, வாழ்த்தி அனுப்பினார்கள். பிறகு

"இலங்கையின் கொழும்புவில் பன்னாட்டு மாணவர்களுக்கான பேச்சரங்கில் கலந்துகொண்ட போது, இருபது வயதைக் கடந்த பிற நாட்டு யுவன் யுவதிகள் இவர் காமராஜர் தானே. சின்ன பிள்ளையில் படிச்சிருக்கோம் என்று பெருமிதம் அடைந்தார்கள்". இலங்கைத் தமிழர்களும் அடையாளம் கண்டுகொண்டனர்.

"உலகளாவிய நிலவரைவியல் அடிப்படையில்

தமிழினம் வியாபித்து இருப்பதை உணரமுடிந்தது"

அதன் ஆதிப்புள்ளியாக தமிழகம் இருப்பதை அறியலாயிற்று. வேறுபல நாடுகளுக்கு மக்கள் குடிபெயர்ந்தாலும் இன்றளவும் தமிழக வரலாற்றை அறிந்துவைத்துள்ளனர்".

தங்களின் எதிர்பார்ப்பு?

வில்வாவிடம் நான் எதிர்பார்ப்பது, தமிழர்தம் தொன்மை சிறப்புகளான காதல், மானம், வீரம் இவற்றை இத்தலைமுறைக்கு கொண்டுசேர்ப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம். மேலும், ஆரோக்கியமான தமிழ்ச்சொல்லாடல்களை தமிழ் இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்கலாம்.


திரு. பச்சையப்பன்:

puducherry-pachaiyappan-in-tamil-tshirt

ச. பச்சையப்பன், பெயரை போல் மிகவும் இனியவர், புதுச்சேரியில் மென்பொருள் வடிவமைப்பாளராக உள்ளார், இவரோ 24 சூரிய சுழற்சியை கண்டவர், மிகவும் அன்பாக பழக கூடியவர், தமிழ் மீதும் அமோக ஆர்வம் கொண்டவர், அவரின் வழியில் சில பதிவுகள், நான் பச்சையப்பன், வில்வா தமிழ் ஆடைகள் நிறுவனத்தில் ஜூன் முதல் ஆடை வாங்கி வருகிறேன் எனது முதல் ஆடை, வள்ளுவர் படம் மற்றும் தெய்வத்தான் குறள் பொறித்த ஆடையே, அதன் பின் வீழ்வேனென்று நினைத்தாயோ, தீதும் நன்றும் ஆடைகள் வாங்கினேன், தரம் நல்லதாகவும், தையல் சரியாகவும் அதனை விட டெலிவரி மிக சிறப்பாக உள்ளதால் மேலும் ஆடைகள் வாங்க என் மனம் ஆசைகொள்கிறது.

"நான் தமிழ் ஆடைகள் போட்டு மீசையை முறுக்கின அப்படி இருக்கும் என் உடம்புக்கு அந்த Tamil Tshirt 'கெத்தா' இருக்கும், எல்லாரும் விஜய், அஜித், ரஜினி, அப்புறம் புரியாத இங்கிலிஷ் டிஷர்ட் போட்டு வரும் போது நான் மட்டும் தனியா தெரிரேனு சொன்னாங்க அது ரொம்ப சந்தோசம்".

எங்க M.D. அவருக்கு வேணும் சொன்னாரு, அவர் பிறந்த நாளுக்கு பரிசா கொடுக்கலாம்னு இருக்கேன், இன்னும் "யாதும் ஊரே" "என் மரபணு" ஆடைகள் வாங்க நினைக்கிறன், தயாரிப்பு முடிந்தவுடன் சொல்லுங்க நண்பா!!! என்றார் பெருமிதத்தோடு.


திரு. இரவிக்குமார்:

tamil tshirts in millitary / indian army

எனது பார்வையில் இந்திய இராணுவத்தில் பணிபுரியும் அனைவரின் சேவை உணர்வையும் நாட்டுக்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கும் தைரியத்தையும் இத்தருணத்தில் நம் அனைவரின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டுக்காக செயல் புரியும் ராணுவ மருத்துவமனை அதிகாரி திரு. இரவிக்குமார், ஐயாவின் மீசையே சொல்லும் அவர் ஒரு வீரத்தமிழன் என்று இராணுவத்தில் இருக்கும் நெருக்கடியான சூழலில் கூட அவருடைய தமிழ் மீதான ஈடுபாடு எங்களை மெய் சிலிர்க்க செய்கிறது. இனி அவர் பார்வையில் வில்வா தமிழ் ஆடைகள் ப்பற்றி காண்போம்.

நான் இராணுவத்தில் Dept. of Pathology எனும் பிரிவில் அதிகாரி, எனது மொழி எனது அடையாளம் இதில் பெரிய நாட்டம் உள்ளவன் நான், "கற்றது தமிழ்", தமிழ் அவமானமல்ல என் அடையாளம்", "அச்சம் தவிர்" என நீளும் எனது தமிழ் ஆடைகள் இருப்பு. உங்கள் ஆடைகள் நல்ல தரத்தில் உள்ளது ஆனால் ரவுண்டு நெக் வகையில் உள்ளது, காலர் வகையில் அனைத்து வடிவமும் கிடைத்தால் நல்லா இருக்கும், ஒரு சிறிய மறக்க முடியாத நிகழ்வு இங்கு சொல்ல நினைக்கிறேன்,

"ஒரு முறை கவுகாத்தி விமான நிலையத்தில் "ஆம் நாங்கள் தமிழர்கள்" ஆடை அணிந்து நடக்கும் போது பலர் வியப்பாக கண்டனர், எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது, அதில் இரு நபர்கள் நேரடியாக வந்து என்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு கேட்டனர், அது மிக மிக பெருமையாக நான் உணர்ந்த தருணம், என் மொழிக்கு கிடைத்த பெருமையாகவே இதனை நான் பார்க்கிறேன், காரணம் நான் ஒரு பிரபல நடிகனோ நடிகையோ இல்லை, சாதாரண மனிதன்..."


திரு. தாமரைக்கண்ணன்:

tamil-letters-in-single-pic

அடுத்து தமிழ்நாட்டின் காசியாம், தென்காசி மண்ணின் மைந்தன், 22 முறை சூரியன் சுழற்சியை கண்டு ஆய்வகத்தில் பணிபுரியும் நண்பர் திரு. தாமரை கண்ணன் பற்றியே, நமது வில்வா தமிழ் ஆடைகளை புலனம்(whatsapp) மூலமாக பெற தொடங்கியவர், இன்று வரை நமக்கு நல்ல தொடர்பில் இருக்கிறார், ஆய்வக பணி சுமை காரணமாக பெரும்பாலும் அவரது அனைத்து பதில்களும் ஒலி வகையாகவே இருக்கும், அவருடைய நண்பர்களும் இவரை போல் ஆடை அணிய விருப்பம் கொள்ளும் அளவுக்கு இவர் தம் தமிழ் மொழியின் ஈடுபாட்டை வெளிக்காட்டி கொண்டு இருக்கிறார் என்பதை உணரலாம்.

இவர் சொல்கையில் "ஆடையின் தரம் அருமை, நினைக்கவில்லை தமிழில் இத்தரத்தில் ஆடைகள் கிடைக்கும் என, ஆடைகள் அணிய நன்றாக உள்ளது, எனது உடம்பிற்கு கச்சிதமாக பொருந்துகிறது."

மேலும் பல வடிவங்கள் தயாரிக்கவும், சில பழைய கோவில்களை வள்ளுவர் பொரித்தது போல் ஆடையில் பொரித்தால் நன்றாக இருக்கும், சிறிது முயற்சிக்கவும்.


திரு. குழந்தைவேல் பாஸ்கர்:

அண்ணாவோ சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி ஊரை சார்ந்தவர், வெளிநாட்டில் வேலை செய்யும் அண்ணாவிற்கு ஆடையோ தமிழ் நாட்டில் இருந்து தமிழ் எழுத்தால் நூற்றெடுத்த தமிழ் ஆடைகள், எந்த வடிவம் நன்றாக தெரிந்தாலும் பெரும்பாலும் முதலில் ஆர்டர் வரும், வீட்டிற்கு தொடர்பு கொண்டு இது போல் ஆர்டர் வந்துஉள்ளது என்போம் அவர்களும் எவ்வளவு பணம், என்று வரும் என விசாரித்து பெற்று கொள்வர். குழந்தை வேல் பாஸ்கர், நமது 8 மாத வெளிநாடு வாழ் வாடிக்கையாளர், வெளிநாட்டில் பணி புரியும் திரு. குழந்தைவேல் பாஸ்கர் அய்யா தமிழின் புகழ் உச்சியான திருவள்ளுவரை எகிப்து நாடு வரை ஆடையில் சுமந்தவர், வெளிநாட்டு மக்களுக்கும் தமிழ் ஆடைகள் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள் அதன் முதல் படியாய் அய்யா வள்ளுவர் ஆடையை அணிந்து எகிப்து பிரமிட் வரை சென்றது அமையும் என எண்ணுகிறோம், பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தோம் ஆனால் தோல்வியில் முடிந்தது, அதனால் எங்களுடைய பழைய உரையாடல் வைத்து இப்பதிவை எழுதுகிறேன்,

எகிப்து சென்ற வள்ளுவர்:

எகிப்து பிரமிடுகளில் தமிழி எழுத்துக்கள் இருக்கா இல்லையா என்பது தனியாக இருக்க, வள்ளுவர் படம் பொறித்த ஆடை எகிப்து பிரமீடு வரை சென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகவே அமைந்தது,

thirukkural thiruvalluvar in egypt thirukkural tshirts near pyramidஎகிப்தில் எடுத்த படங்களை அண்ணா நமக்கு காட்டினார், இதனை பகிர அனுமதி பெற்றோம் ஆனால் அந்நாளில் பகிர முடியவில்லை, கூடிய விரைவில் எகிப்தில் வள்ளுவர் என முழு கட்டுரை எழுத எத்தனித்துள்ளோம்.இதில் பலரது கருத்துக்கள் பதியவே வில்வாவின் விருப்பம், நேரமின்மை காரணமாக வெகு சிலரது கருத்தையே பதிய முடிந்தது, இருப்பினும் நாங்கள் இதனை போல் உங்களுக்கும் ஒரு சிறப்பு கட்டுரை வெளியிட ஆசைகொள்கிறோம், அதற்கான சில வினா விடை புலனத்தில்(whatsapp) பதிய உள்ளோம், ஆகையால் நம்மை தொடர்பு கொள்ளவும்: +91 9551789459 / [email protected]


உங்கள் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்டியுள்ளீர்ங்களா ? <-- இப்போதே பதிவு செய்யுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்.