காமராஜர் வாழ்க்கை வரலாறு | Kamarajar Life History

Posted by வில்வா குழுமம் 14/07/2017 8 Comment(s)

பெருந்தலைவர் காமராசரின் வாழ்கை வரலாறு - Perunthalaivar Kamarajar A Brief Note :

 

நம் எல்லோராலும் காமராசர் என அறியப்பட்ட "கர்மவீரர் காமராசரின்" இயற்பெயர் "காமாட்சி", அஃது அவரின் குலதெய்வத்தின் பெயர் ஆகும். காமராசர் காமாட்சியாக, குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தது  1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள். அவருக்கு நாகம்மாள் என ஒரு தங்கையும் என்பது பலருக்கு தெரியாது.

 

KarmaVeerar Kamarajar was born on 15th of July 1903 to Kumarasamy Nadar and Sivagamy Ammal. Kamarajar's born name was Kamatchi, family deity of K. Kamaraj. He had a younger sister namely Nagammal.

 

காமராசரின் தனி வாழ்க்கை: - Kamarajar's Personsal Life

காமராசர் தனது சிறு வயதிலே தந்தையை இழந்தார் ஆகையால் அவர்  6-ஆம் வகுப்பில் தன் கல்விப்படிப்பை நிறுத்தி தனது மாமாவின் துணிக்கடையில் தனது வாழ்க்கைப்படிப்பை தொடங்கினார். தனது 16 வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணி செய்ய தொடங்கியவர் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை, தனது ஆயுள் முழுவதையும் நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் நம் பெருந்தலைவர்.

 

At a very young age Kamarajar lost his dad and situations made him to discontinue his school studies, He worked in his uncle's cloth shop where he got inspired by freedom fighters elocution. He joined Indian Nation Congress at the age of 16 after being inspired by Rajaji's speech. Mr. K. Kamarajar had no family and his generation ended with him, besides his personal life he shown interest in public life and sacrificed his life for the improvement of poor people and the country.

அனைவருக்கும் கல்வியும் உழைப்பும் போதுமானது - காமராசர் | காமராசர் ஆடை பெற இங்கே சொடுக்கவும்

Blog ad image

காமராசரின் பொது வாழ்க்கை: K. Kamaraj's Public Life

சிறை வாழ்கை: Jail Life

 
துணிக்கடையில் நேர்த்தியாக தன் வேலையை செய்த காமராசர் வரதராஜ நாயுடு, ராஜாஜி போன்றோரின் பேச்சால் கவரப்பட்டு அரசியல் மற்றும் சுதந்திர போராட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார், காமராசர் முதன் முதலில் சிறைச்சாலை சென்றது 1930 - இல் வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்தில் கலந்துக்கொண்டதற்காக, பின் விருதுநகர் வெடிகுண்டு வழக்கு, ஆகத்து புரட்சி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் எதிர்ப்பு, வெள்ளையனே வெளியேறு போன்ற பல்வேறு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தனது ஒன்பது ஆண்டு இளம் வாழ்க்கையை சிறையில் கழித்தார் நம் பெருமைக்குரிய கிங்மேக்கர் காமராசர்.
 
Mr. K. Kamarajar joined Indian National Congress at his 16th age after getting influencing by Rajaji speech. He involved in many protest and jailed for over 9 years for various incidents namely toddy shop protest, Quit India Movement, Vedaranya Salt Protest, Virudhunagar bomb blast and so on.

 

 

 

 

 

 

 

 

தமிழக தலைவராக தமிழன் காமசாரர்: Kamarajar as Tamilans Leader

 

1947 - இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் நம் விடுதலைப் போராட்ட வீரர் காமராசர்.  தனது பெரும் தியாகத்தாலும் சலியாத உழைப்பாலும் 1952 - ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இரண்டு ஆண்டு கால பொற்கால ஆட்சியின் பலனாக 1954 -இல் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார் காமராசர்.  தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டி பெரும் செல்வாக்கை பெற மிக முக்கியமான கர்த்தாவாக திகழ்தவர் நம் காமராசர்.

 

After India's independance from British on 1947, Kamarajar started his political career. Upon his huge sacrifice and remarkable work at freedom fight he is nominated as member of parliament in 1952. His dedicated administration made him as Chief Minister of TamilNadu in 1954. Also he is the main person for the influence of Congress Party over the entire Tamil Nadu. 

 
 
 
 
 
 

காமராசரின் சாதனைகள்:

 

காமராசர் தனது 9 ஆண்டு கால முதல்வர் வாழ்க்கையில் செய்த சாதனைகள் நூறு ஆண்டுகள் பேசும் அளவுக்கு தொலைநோக்கு பார்வையில் அமைத்து, தனக்காக உழைக்காமல் மக்கள் நலனுக்காக உழைத்த ஒரே தலைவர் நம் படிக்காத மேதை காமராசர் தான், அவரின் சாதனைகள் சிலவற்றை நாம் பாப்போம். அதிகம் படிக்காத நம் பெருந்தலைவர் காமராசர் கல்விக்கு செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்க 30000க்கும் மேல் பள்ளிகள் தொடங்கினார், பள்ளிகள் தொடங்கினால் போதுமா மாணவர்கள் வேண்டாமா? அதற்கு அவர் செய்த தந்திரம் தான் இலவச மதிய உணவுத் திட்டம், தன் பிள்ளையாவது பசி இல்லாமல் இருக்கட்டும் என பள்ளிக்கு அனுப்பிய பெற்றோரே அதிகம், 7% ஆக இருந்த கற்போரின் எண்ணிக்கையை 37% ஆக மாற்றி புன்னகைத்தவர் தான் நம் புரட்சிதலைவர் காமசாரர், பள்ளி, கல்வி மட்டும் போதுமா வேலை வேண்டாமா என யோசித்தவர் பல புது புது தொழிற்சாலைகள் நிறுவி மக்களின் பசி, பஞ்சம் போக்க வழிவகை செய்தார். கல்வி, தொழில் என்று மட்டும் நின்று விடாமல் மின் திட்டம், நீர் பாசன திட்டம் போன்றவற்றிலும் காமசாரர் தனது சிறப்பான பணியை ஆற்றினார் என்று கூறவேண்டும்.

 

அவர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் சிலவற்றை காண்போம்,

 • இலவச மதிய உணவு திட்டம்,
 • இலவச புத்தகம், சீருடை திட்டம்
 • நெய்வேலி நிலக்கரி திட்டம்,
 • பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை,
 • திருச்சி பாரதி ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்,
 • மேட்டூர்  காகிதத் தொழிற்சாலை,
 • மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
 • காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம் என அவரது பணிகள் நீளும்.
 
Mr. K. Kamarajar served as a chief minister for a total period of 9 year, which is treated as the golden period of Tamilnadu even till now. All his works had a diplomatic future vision. Being loyal he made others to be loyal, all his decisions proved he is a honest and bold leader. Being a uneducated leader, he opened nearly 30000 schools in Tamilnadu and improvised the existing schools. In his period the educated people rate raised from 7% to 37%. His works in other fields are quite impressive. Some of them are
 • Free Meal Scheme at school,
 • Free uniform and books scheme,
 • Neyveli Lignite Corporation,
 • Perambur Loco Works,
 • Bharat Heavy Electrical Limited,
 • Mettur Dam Project,
 • Kaveri Delta Project and so on
   

காங்கிரஸ் தலைவர் காமராசர்: Kamarajar as All India Congress Leader

 

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான்  (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை”கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும், கூறியது மட்டுமில்லாமல் தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்து பதவி ஆசை இல்லாத தலைவர் என நிரூபித்தார் நம் காமராசர். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அவரின் நடவடிக்கைகள் கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாற்றியது, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார். காமராஜர் இதலனாலேயே  "கிங்மேக்கர் காமராசர்" என்று போற்றப்படுகிறார்.

 

Kamarajar at his 59th age recognized he is in retirement stage so he drew a plan and name K- Plan(Kamarajar Plan). He proposed that all senior Congress leaders should resign from their post and devote their experience towards the growth of Party and the Nation. Followed by Kamarajar five Chief Ministers namely Lal Bahadur Shastri, S.K.Patil, Biju Patnaik, Jagjivan Ram, Morarji Desai resigned their post and devoted them to the growth of Party by guiding the young leaders.  Jawaharlal Nehru being impressed by Kamarajar's achievement and devotion brought him to Delhi as President of The Indian National Congress. After Nehru Death on 1966, he refused to become the prime minister and introduced two powerful prime ministers Lal Bahadur Shastri in 1964 and Indira Gandhi in 1966. He remained as the President of the Indian National Congress till his death. 
 

காமராசரின் இறப்பும் தேசத்தின் இழப்பும்:

 

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேகமே?


Kamarajar died in his home in sleep on October 2nd 1975, Indian Government honoured Mr. K. Kamarajar with the highly prestigious "Bharat Ratna Award in 1976. Still many are wondering how this man could do this much as he dedicated his entire life serving the People of India. The wealth of Kamarajar after his death is accounted and its shocking that he had two sets of cloth, 150 INR in his bank account and he resided in a rental house. We can confidentally say that No Nation will have this kind of Leader and even in India it will not happen again. 


 

தமிழுக்கு 30 நாட்கள்:

தமிழுக்கு 30 நாட்கள் எனும் பெயரில் ஒரு புதிய முயற்சியாக ஆங்கிலம் கலக்காத தமிழில் தினம் ஒரு காணொளி என்ற முறையில் முப்பது நாளுக்கு (ஜூலை 2 - ஜூலை 31) 30 காணொளிகள் மூலம் பலரும் அறியாத தகவல்களை பகிர்ந்து வருகிறோம். அதில் இரண்டாவது வாரம் காமராசர் அவர்களின் பிறந்த நாளையொட்டி காமராசரை பற்றிய பல அறிய நிகழ்வுகளை காணொளி வடிவமாய் பகிர்ந்துள்ளோம்.

 

பொற்கால ஆட்சி கொடுத்த காமராசர்(ஜூலை 10 காணொளி):

 

தமிழக முதல்வர்களின் தமிழ்நாட்டுக்கு பொற்கால ஆட்சி கொடுத்த முதல்வர் என்ற பெருமை நம்ம காமராசர் ஒருவரை மட்டுமே சேரும் காரணம் வருங்காலத்தை கணக்கில் கொண்டு அவர் கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள். அவற்றுள் மிக முக்கியமான சில ஏழை பிள்ளைகளும் பள்ளிக்கு செல்ல கொண்டு வந்த இலவச மதிய உணவு திட்டம், இலவச பாடப்புத்தகம், பிள்ளைகள் சாதி வேறுபாடு இன்றி பழக செய்ய பள்ளிகளில் சீருடை அணியும் திட்டம், விவசாயிகளுக்கு வைகை ஆணை, மணிமுத்தாறு ஆணை, ஊரெங்கிலும் புதிய தொழிற்சாலைகள் என அவரின் 9 ஆண்டு கால ஆட்சியை 50 ஆண்டுகளை தாண்டியும் பேசி வருகிறோம். 

 

 

காமராசர் ஏன் திருமணம் செய்யவில்லை:

 

அன்று பலரது மனத்திலும் ஓடிய கேள்வி வயசாகி கொண்டே போகிறதே ஏன் காமராசர் இன்னும் திருமணம் செய்யவில்லை, நாட்டின் முதல்வருக்கு பெண் தர யாரும் முன்வரவில்லையா என்றே, இதனை அவரிடத்தில் கேட்க யாருக்கும் துணிவு இல்லை, இங்கிலாந்து ராணி நேரடியாக கேட்டார், சிறிது கூட யோசிக்காமல் இன்றும் என் ஆட்சியில் பல பேர் திருமணவயதாகியும் கல்யாணம் செய்யாமல் வறுமையில் இருக்க நான் மட்டும் எப்படி மணம் முடிக்க முடியும் என் சமூகத்தில் தங்கைக்கு தான் முதலில் முடிக்கும் வழக்கம் என்றார். நாட்டையே தன் வீடாக நினைக்கும் எண்ணம் இனி யாருக்கும் வராது. 

 

 

காமராசர் ஆட்சி இருட்டு ஆட்சி என கூறிவருக்கான பதில்:

காமராசர் ஆட்சி சரியாக இல்லை, அவர் ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட ஆட்சி என கூறியவர்க்கான பதிலாக வெளியிட்ட காணொளி. ஆண்டுகால முதல்வர், இருமுறை பிரதமர் ஆகும் வாய்ப்பு இப்படிப்பட்ட மனிதன் சாகும் போது சட்டை பையில் பத்து ரூபாய் இல்லை, இருந்த வீடு வாடகை வீடு, இது தான் காமராசரின் பொருளாதாரம், ஆனால் நாடோ படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய நாடு. இன்றும் கோடிகளில் சுருட்டும் திராவிட ஆட்சிக்கு தெரியுமா எது பொற்கால ஆட்சி என்று என்பதே இருண்ட ஆட்சிக்கு மக்களின் பதில்.

 

மத்திய மந்திரியை கேள்வி கேட்ட துணிவு:


இன்றும் பலதரப்பட்ட மக்கள் சுறுசுறுப்பாக பயன்படுத்தும் சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள சுரங்க பாதை கட்ட ஆலோசனை கூட்டம், தமிழக அரசு சார்பில் காமராசர், மத்திய அரசு சார்பாக மத்திய ரயில்வே மந்திரி மற்றும் பொறியாளர்கள். சுரங்க பாதை கட்டுவதற்கான செயல் திட்டங்களையும் வரும் இடையூறுகளையும் பொறியாளர்கள் விளக்க, மத்திய மந்திரி இது எல்லாம் சாத்தியமே இல்லை என பின்வாங்க, சடாலென்று காமராசர் இதை சொல்ல ஒன்றும் நீர் டில்லியில் இருந்து வரவில்லை, கட்டுவது எப்படி என்பதை ஆலோசிக்கவே இந்த கூட்டம், எப்படி கட்ட போகிறோம் என்பதை ஆலோசிப்போம் என கூறியது மட்டுமில்லாமல் செய்தும் காட்டினார். அவரை போல் உனக்கும் துணிவு இருந்தால் நீயும் வாழும் காமராசரே!

 

அடுத்த தலைப்பு :

காமராசரின் அமைச்சரவை சிறப்பு

காமராசரின் வாழ்கை நிகழ்வுகள்

 

நன்றி: rparivu itstamil பெருந்தலைவர் 

 

8 Comment(s)

Babu:
15/07/2017, 07:00:18 PM
Reply

I don't know much about the great leader Thank you for enlightenment

Tamiltshirts:
02/08/2017, 07:41:06 PM

Our pleasure sir, place your order at https://www.tamiltshirts.in/kamarajar-tamil-tshirt and assist us spreading the knowledge about our great leader Kamaraj to the whole world.

Venkatesh:
13/07/2018, 06:58:52 PM
Reply

9003840781

Nandhini:
08/08/2018, 05:14:50 PM
Reply

I know more details

selvaraj:
20/08/2018, 01:23:12 PM
Reply

very good person man

Sasikumar:
13/02/2019, 01:45:07 PM
Reply

More details know more update

MAYURAPRIYA:
02/03/2019, 07:51:18 PM
Reply

I am glad to read the information .Thankyou very much.

Vellai:
14/03/2019, 08:36:49 PM
Reply

jessy johnson:
06/05/2019, 04:13:18 PM
Reply

Are you interested to selling one of your k1dney for a good amount of $800,000 USD in India pls kindly Contact us now on our email: as we are looking for k1dney donor, Very urgently who are group B,group A ,O ve and 0 ve. Interested person should contact us now.DR JESSY JOHNSONWhatsApp:+919667270992contact us:+919205206332WhatsApp:+919667270992 rebfeentnt

Leave a Comment