Free Shipping for all order above $100 | Happy Diwali

பனை மரத்தின் பலன்கள் மற்றும் அதன் வகைகளும்
பனை மரம் | தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி
Palm tree | The survival of the Tamil community
உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளம்.
Tamil is the senior most language for all the languages in the world. In ancient days the tamil letters were written on palm leaves. The palm tree is the identity of the Tamil.
மலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில், தமிழகத்தில் என தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பனைமரமும் வளர்ந்தது.
Palm tree grew in Malaysia, Eelam, Mauritius Island, South Africa, Tamil Nadu.
அதனால் தான் நமது முன்னோர்கள் பனை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.
That is why our ancestors called the palm tree a time of learning.
உணவு நிலையில் மட்டுமன்றி உணர்வு நிலையிலும் கூட நம் முன்னோர் பனை மரத்துடன் இணைந்துள்ளனர்.
Our forefathers have joined the palm tree not only in food but also in consciousness.
பனைமரம் இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
A palm tree, though a thousand gold; Even a thousand gold.
பனை மரம் மொத்தம் 34 வகை:-
Total 34 types of Palm tree
1. ஆண் பனை, Male palm Tree
2. பெண் பனை, Female palm Tree
3. கூந்தப்பனை, koonthal Palm Tree
4. தாளிப்பனை, Thali Palm Tree
5. குமுதிப்பனை, Kumudhi Palm Tree
6.சாற்றுப்பனை, Saatru Palm Tree
7. ஈச்சம்பனை, Icham Palm Tree
8. ஈழப்பனை, Ezha Palm Tree
9. சீமைப்பனை, Simai palm Tree
10. ஆதம்பனை, Aatham Palm Tree
11. திப்பிலிப்பனை, Thippilip Palm Tree
12. உடலற்பனை, Udhalar Palm Tree
Image Credits: New York Post
13. கிச்சிலிப்பனை, Kichili Palm Tree
14. குடைப்பனை, Kuttai Palm Tree
15. இளம்பனை, Illam Palm Tree
16. கூறைப்பனை, Kuraip Palm Tree
17. இடுக்குப்பனை, Itukkup Palm Tree
18. தாதம்பனை, Tatam Palm Tree
19. காந்தம்பனை, Pakkup Palm Tree
20. பாக்குப்பனை, Iram Palm Tree
21. ஈரம்பனை, Iram Palm Tree
22. சீனப்பனை, Cinap Palm Tree
23. குண்டுப்பனை, Kuntup Palm Tree
24. அலாம்பனை, Alam Palm Tree
25. கொண்டைப்பனை, Kontaip Palm Tree
26. ஏரிலைப்பனை, Erilaip Palm Tree
27. ஏசறுப்பனை, Yaser Palm Tree
28. காட்டுப்பனை, Kattup Palm Tree
29. கதலிப்பனை, Katalip Palm Tree
30. வலியப்பனை, Valiyap Palm Tree
31. வாதப்பனை, Vatap Palm Tree
32. அலகுப்பனை, Alakup Palm Tree
33. நிலப்பனை, Nilla Palm Tree
34. சனம்பனை. Canam Palm Tree.
பனையின் பயன்கள்:
Uses of the Palm:
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. பனை பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரத்திலான பொருட்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
Palm tree supplies food and food items. Palm is the primary ingredient which is formulated into a variety of food items such as, jaggery, pananchini, panangalkundu, palm jaggery, palm candy. Palm leaves, brushes, toads, decorative objects, wood and wood products are the food items derived from palm. khadi and village industry commission, a palm tree can produce 150 liters of sweet toddy, 1 kg of fibre and 1.5 kg of rib of a palmyra. It has 8 papyrus and 16 fiber hairs. It is also estimated that 24 kg of palm jaggery, 2 baskets, 2 brushes and 6 mats can be obtained from a palm tree.
Image Credits: olai petti from kottanz
உலக அரங்கில் பனை மரத்தின் மதிப்பு :
The value of the Palm tree on the world stage:
அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.
Export of palm products to countries like the US, UK, Cherman, Italy, Belgium, France, Australia, Japan and India earn over Rs 200 crores annually. In-country food pantries are mostly shipped to Goa, Kanyakumari and Bellary. Goa is in the forefront of these.
விவசாயமும் வேலைவாய்ப்பும் :
Agriculture and Employment:
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.
Palm industry is the largest employment opportunity after agriculture and handloom. The palm industry provided 6.94 lakh job opportunities nationally and 5.87 lakh jobs in Tamil Nadu during the period 1985-1986.
இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். ஆகவே, அரசு கவனத்தில் கொண்டு பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பனை மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். செங்கல் சூலைகளுக்காக லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
Reaction includes palm workers, cannabis women, lambs, and merchants. If all the trees are suitable for palm trees except young trees, this industry alone will provide employment of 10 lakh people. Therefore, the government should take measures to protect palm trees. Millions of trees have been destroyed for brick kilns.
மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய மனிதர்களுக்குப் புரியவில்லை. ஆனால், நமது முன்னோறோர்கள் தெளிவாக புரிந்து தெளிந்து மரம் வளர்த்தார்கள்.இயற்கையின் அந்தனை செயல்பாடுகளும் சரியாக இருந்தது.
There are no humans without trees. But, our ancestors clearly understood and planted the tree.
விதைத்துக் கொண்டே இரு...
முளைத்தால் மரம்.
இல்லையேல் மண்ணுக்கு உரம்...
என்பார்கள்.
Keep the seed ...
The tree that sprouted.
Soil fertilizer ...
Nodded.
ஆகவே, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதையை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருங்கள்.
So, sow some seed every day in this soil.
அதிலும் குறிப்பாக தமிழர் தேசிய இனத்தின் தேசிய மரம் பனையாகும். அந்த பனை மரங்கள் இன்றைக்கு தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது எனலாம். அவ்வளவு வேகமாக பனை மரங்கள் இந்த மண்ணை விட்டு மறைகிறது. அதை மீட்க வேண்டும்.
Most importantly, it is the national tree of Tamil nationality. The palm trees are almost extinct in Tamil Nadu today. So fast palm trees disappear from this soil. It must be restored.
பனை மரம் தமிழர் அடையாளம். நமது தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்க வேண்டியது நமது கடமையாகும்.
Palm tree Tamil Identity. It is our duty to restore the identity of our nationality.
தமிழர்களே பனை விதைகளை நடுங்கள்...
தமிழர் பாரம்பரியம் மீட்டிடுங்கள்....
All tamilans must plant the palm seeds
Recover the Tamil tradition...
பனை அதை நாளும் நினை !
Think of it all day!