டீ-ஷர்ட்கள் வழியாக, தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பும் வில்வா!


டீ-ஷர்ட்கள் வழியாக, தமிழ் மொழியை

உலகெங்கும் பரப்பும் வில்வா!

பிரபல இணையதள பத்திரிக்கை நிறுவனமான yourstory.com நிருபர் நந்தினி பிரியா நம்மை மார்ச் மாதம் 2017 தொடர்பு கொண்டு டிசர்ட் வழியாக தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பும் நம் முயற்சி பற்றி விசாரித்தனர். அவர்களுக்கு நாம் தமிழ் பற்றி அறிந்த சிலவற்றை பகிர்ந்தோம். தமிழ் மொழி புகழ் பாடாத கவி இவ்வுலகில் இல்லை எனவே கூறலாம், நம் மொழி பற்றி மட்டுமே புகழ் பாடவில்லை, நம் மொழியும் அதன் பண்பையும் அதனை சார்ந்த மக்களின் பண்பாட்டையும் சேர்த்தே புகழ்ந்தனர். இத்தனை புகழ் பெற்ற தமிழின் நிலை இன்று சொல்லும் அளவுக்கு இல்லை, இஃது ஒரு தமிழனாக மிகவும் வருத்தமளித்தது, ஆகையால் தமிழின் பெருமையையும் அதன் வழியாக வந்த பண்பாட்டின் சிறப்பையும் உலகறிய செய்ய நம் முயற்சியே தமிழில் ஆடைகள்,

பாரதி வள்ளுவர் தமிழில் அளித்த அரிச்சுவடியை மூலமாக கொண்டு பல வடிவங்களை ஆடைகளில் பொறித்தோம், இதனால் தமிழின் பல அறிய வசனங்கள் புகழடைந்தன, பாரதியின் "வீழ்வேனென்று நினைத்தாயோ", "அச்சம் தவிர்", "ரௌத்திரம் பழகு" வள்ளுவரின் படம், திருக்குறள் வரிகள், உழவு படங்கள் போன்றவன நம் வடிவங்களில் பெரிதும் வரவேற்கப்பட்டது. லிவைஸ்(Levis), நைக்கி(Nike), ரீபோக்(Reebok), அடிடாஸ்(Adidas), ஜாக்கி(Jockey) போன்ற ஆடை ப்ரண்ட்கள் இன்று உலகளவில் விரிவடைந்து, அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ் ப்ரண்ட்கள்(brand) பொறுத்தவரையில் 'ராம்ராஜ்', 'பொம்மிஸ்' போன்ற குறைந்த ப்ரண்ட்களே இருக்கின்றன. தமிழிலும் உலக புகழ்பெற்ற ஆடை ப்ரண்ட்களை உருவாக்குவதே எங்கள் எதிர்கால நோக்காகும்.

பாரதியின் "அச்சம் தவிர்" எனும் கூற்றும்,

வள்ளுவரின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருக்குறளும்" எங்களின் அமோக விற்பனை ஆகும் வடிவங்கள்.

"தமிழை உலகாளும், பின்பு 'தமிழே' உலகாளும்"

தற்போது 6000+ வாடிக்கையாளர்களுடன் பயணிக்கும் வில்வா குழுமம், இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா முதலான நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். கூடிய விரைவில் உலகம் முழுதும் பிரித்தெயேக வணிக சாவடிகளுடன் தமிழை உலகம் முழுக்க பயணிக்க வைப்போம் என உறுதி அளிக்கிறோம்.

அடுத்தகட்ட திட்டங்களும் இலக்குகளும்:

  • பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றமாதிரியான ஆடைகள் தற்போது சோதனை வடிவில் உள்ளது. நல்ல வரவேற்பு கிடைத்தால், அவற்றையும் வெளியிட்டு விடுவோம்.
  • சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் கடைகள் திறக்கவும் முடிவெடுத்துள்ளோம்.
  • 'வில்வா கார்ட்' எனும் இணையதளம் வழியாக கிடைப்பதற்கு அரிதான தமிழ் பாரம்பரியம் சார்ந்த பொருட்களும், மூலிகைகள், மருந்துகள் விற்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
  • தமிழ் வர்ம கலைகளை, வல்லுனர்கள் கொண்டு கற்று கொடுக்கும் நிறுவனம் ஒன்று நிறுவுவதும், என் லட்சியங்களில் ஒன்றாகும்.

நன்றி: Yourstory.com