தமிழுக்கு #30 நாட்கள் - வாரம் #01:

தமிழுக்கு #30 நாட்கள் - வாரம் #01:

தமிழே மொழி, தமிழே உயிர் என நாம் வாய் வார்த்தையாக மட்டுமே கூறாமல் பிற மொழி கலக்காமல் "வில்வா" தமிழை பேச எடுத்த ஒரு சிறு முயற்சியே தமிழுக்கு 30 நாட்கள் எனும் முயற்சி. இந்த பக்கத்தில் கடந்த ஒரு வாரமாக நம் பக்கத்தில் பதிந்த காணொளிகளின் தொகுப்பை பார்க்கலாம்.  


 

நாள் #௦௧:

 

கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடியான தமிழ் மொழியின் ஆரம்பகால எழுத்து முறைக்கு தமிழி எழுத்து முறை என்று பெயர். சுமார் பத்தாயிரம் ஆண்டுக்கு முன் உருவாக்கிய மண் பண்டங்களிலும் ஓலைகளிலும் காணப்பெறும் இவ்வெழுத்து முறைக்கு தமிழ் பிராமி என்ற பெயரும் உண்டு. தென் இந்தியா முழுதும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பல பண்டங்களில் இந்த வடிவ எழுத்துக்களே அதிகம் காணப்பெறுகிறது. இதுவே பின்னாளில் திரிந்து தற்போது பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்துக்கள் என ஒரு சான்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


நாள் #௦௨:

மருத்துவம், அறிவியல், பண்பாடு என தமிழர்கள் சிறந்து விளங்காத துறையே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே, தமிழில் தோண்ட தோண்ட அதிசயம் என்பதும் வியப்புபிள்ளை. ஆனால் தமிழ் என்ற சொல்லே சிறப்பு என்றால் சற்று வியப்பு தான், உலகில் எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழியின் "தமிழ்" என்ற சொல்லுக்கு உண்டு, தலைகீழாக திருப்பி போட்டாலும் அதே பொருள் தான் வரும். இது தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று. 


நாள் #௦௩:

அ' வில் தொடங்கி ன்'னில் முடியும் நம் தமிழ் மொழி பேசுவதற்கு மட்டும் பயன்படும் வார்த்தை மொழி அல்ல, நம் உயிரோடு கலந்து, உணர்வோடு வெளிப்படும் நம் உணர்வின் மொழி, உலகில் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் கோவத்தில் 'ஏ', வழியில் 'அ' என்று நம் தமிழ் மொழியை தான் உணர்வால் பேசுகின்றனர், அதனால் தான் என்னவோ தமிழ் மொழிக்கு உலக மொழிகளின் தாய் என்ற புகழ். உலகில் உள்ள மொழிகளிலேயே வார்த்தைகள் மூலம் உணர்வை ஊட்டுமேயானால் அது தமிழ் மொழி மட்டுமே. ஒவ்வொரு தமிழனும் பெருமையுடன் சொல்லலாம் தான் ஒரு தமிழனென்று. 

நாள் #௦௪:

யாரிடமும் இல்லாதது நம்மிடம் இருந்தால் வரும் இன்பமும் பெருமையும் வேறெதிலும் எளிதில் கிடைப்பதில்லை, தமிழிலும் அப்படி ஒரு சிறப்பு உள்ளது, உலகில் எந்த ஒரு மொழியிலும் இல்லாத ழகர உச்சரிப்பு தமிழில் உள்ளது. எதிலும் இல்லாததால் தான் என்னவோ புலவர்கள் பலர் இந்த எழுத்தை சிறப்பு ழகரம் என கூறுவர். இந்தச் சிறப்பு 'ழ' ஒலி சிலரால் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை, உதாரணமாக பலர் வாழைப்பழம் என்பதை வாளப்பளம் என்று தான் உச்சரிக்கின்றனர். சிறப்பை அறியாமல் நாம் நம் தமிழை விட்டுக்கொடுக்கிறோமோ என்ற எண்ணம் சற்று எழத்தான் செய்கிறது. 

நாள் #௦௫:

தமிழ்நாட்டை தவிர உள்ள பல நகரங்களிலும் நாடுகளிலும் தமிழ் பெயர்கள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. பாண்டியன், அம்மா, பாண்டி போன்றவை அதில் முக்கியமானவை. இந்த பெயர்கள் தமிழர்கள் வணிகத்தில் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்திலும் உலகத்தில் தலை சிறந்து இருந்து வந்துள்ளது தெரிகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பல நாடுகளில் இன்றளவும் தமிழ் பெயர்கள் கொண்ட ஊர்கள் இன்னமும் இருக்கிறது, நம் முன்னோர் கடல் கடந்து வாணிபம் மட்டும் செய்யவில்லை ஆட்சியையும் அதிகாரத்தையும் உலக நாடுகளில் நிகழ்த்தியது தெரிகிறது ஏனெனில் அவ்வாறு நிகழ்த்தியுள்ளதால் மட்டும் தான் இன்றளவும் வேறு மொழி பேசும் நாட்டில் இன்றளவும் தமிழ் பெயர்கள் காணப்பெறுகின்றன. உதாரணமாக இன்றும் அமெரிக்கா மாகாணத்தில் ஒரு ஊரின் பெயர் "அம்மா", இதனை போலவே பாண்டியன், முருகன் போன்ற பெயர்கள் அல்லது அதற்கு ஒப்பான பெயர்கள் உலகம் முழுவதும் காணப்பெறுகிறது, இதனை உண்மை என நமது கடலியல் ஆராட்சி நிபுணர் திரு. ஒரிசா பாலு ஐயாவும் ஒப்புக்கொண்டுள்ளார். 

 

Blog Ad Image aah, seyal, activity

நாள் #௦௬:

நம்மில் எதனை பேருக்கு தெரியும் வீராதி வீரன் ராஜராஜ சோழனின் வாளை தூக்கவே 5 நபர்கள் தேவைப்பட்டு உள்ளனர் என்றால், வாளின் எடை எத்தனை எடை இருந்து இருக்கும் என்பது இன்றளவும் கேள்வியே. இதனை விட சிறப்பு கடல் பயணம் செய்து பல ஊர்களில் போரிட்ட ராஜராஜ சோழன் தோற்ற போர் என ஒன்றும் கிடையாது. சென்ற போர்கள் அனைத்திலும் வெற்றியை மட்டுமே கண்ட தமிழக மன்னன், இது என்ன கடவுளின் பாக்கியமா?, அவரின் திறமைக்கு கிடைத்த பரிசு. ஒரு புறம் போர் செய்ய மறுபுறம் உலகமே வியக்கும் அளவிற்கு தஞ்சையில் சிவனுக்கு கோவில் எழுப்பி உள்ளார். இத்தனை திறமை கொண்ட மன்னனை பற்றி வெளியில் வராத தகவல் மேலும் பல உண்டு என்பது மட்டும் உண்மை.

 

நாள் #௦௭:

ராஜராஜசோழன் கட்டிய "தஞ்சை பெரியகோவிலில்" இல்லாத அதிசயம் இல்லை, அதில் மிகவும்  சிறப்பானது இரண்டு. முதலாவது சுடு கற்கள், சுண்ணாம்பு என எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க க்ரானைட் கல்லால் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் ஆயிரம் ஆயிரம் யானைகளால் கட்டப்பட்ட பெரிய கோயில் என்ற சிறப்பு, மற்றொன்று போரில் தோற்று கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு வீரர்களை கொண்டு தன் நாட்டுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் எழுப்ப வேண்டும் என்றால் சோழனின் மனித வள மேம்பாடு எப்படி இருந்து இருக்கும் என்பதே. இப்படி பல அதிசயங்களை தன்னுள் தாங்கி நிற்கும் தஞ்சை பெரியகோயில் தன் நிழலையும் சேர்த்து தாங்குகிறது அதாவது அதனின் நிழல் கீழே இன்று வரை விழவில்லை, தமிழனின் அறிவியல் மற்றும் கணிதத் திறமைக்கு ஒரு சான்றாக நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். 

அடுத்த வாரம்: 

மேலும் பல அறிய தகவல்கள் வரும் வாரமும் பகிர உள்ளோம்.

நன்றிMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.