காமராஜர் மேற்கொண்ட நலத்திட்டங்களும் முயற்சிகளும்

காமராஜர் மேற்கொண்ட நலத்திட்டங்களும் முயற்சிகளும்

                         

                            H.G. வெல்ஸ் என்னும் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர்  பேரரரசர் அசோகர் பற்றி கூறுவது என்னவென்றால், "வரலாற்று புகழ் பெற்ற ஆயிரக்கணக்கான மன்னர்களில் அசோகர் அவர்களின் பெயர் மட்டுமே பேரொளி வீசி  விளங்குகிறது.  இவரின் புகழானது வால்கா-வில் இருந்து  கங்கை வரை போற்றப்படுகிறது”. அதுபோலவே காமராஜர் என்னும் பெயர்  மக்கள் தலைவன் என்று போற்றப்படும். அவர் தமிழ்நாடு அரசியலில் 7 ஆண்டுகள் மட்டுமே முதலமைச்சராக பணியாற்றினார்.  அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அவற்றுள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

 1. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அவரது அமைச்சரவையில் 8     அமைச்சர்கள்  மட்டுமே இருந்தனர். அதில் பின் தங்கிய கிறிஸ்தவ மத பெண்ணும், முகமதியர் ஒருவரும், தாழ்த்தப்பட்ட குலத்தைச்  சேர்ந்த தியாகி ஒருவரும், பிராமண குலத்தைச் சேர்ந்த ஒருவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் அனைவரும் அப்பழுக்கில்லா  ஊழல் இல்லாமல் பணியாற்றினர்.

2. காமராஜர் அவர்கள் கிருஷ்ணகிரி  நீர்த்தேக்கத்தை  திரு.எஸ்.நாகராஜ மணியக்கர் எம்.ஏ.பி.எல் அவர்களின் முயற்சியுடன்  மக்களுக்காக அர்ப்பணித்தார். மறுநாள் வெள்ளிச்சந்தை என்னும் கிராமத்துக்கு வந்தார்கள்.  அங்கு அவர்களுக்கு  மாலை, கொட்டு முழக்கம், பூங்கொத்து போன்ற வரவேற்பு எதுவும் இல்லை. மேலும், அவர்  இப்படி பட்ட வரவேற்பை விரும்பவில்லை.  சுமார் 10 அல்லது 20  பேர் தான் இருந்தனர். அவர்களுடன் உரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

3. அவர் காலத்தில் அரசு அலுவலகங்களில்  கடை நிலை ஊழியருக்கு சம்பளம் ரூ.50 /- , எழுத்தருக்கு ரூ.70 /- ஆக இருந்தது.   ஆனால் அங்கு லஞ்சம் என்ற பேச்சுக்கே  இடம் இல்லை என்ற நிலை தான் காணப்பட்டது. லஞ்சம் பற்றிய புகார் ஏதேனும் வந்தால் காமராஜர்  நீ ஏன் கொடுக்கிறாய் என்று புகார் கூறியவரை பார்த்து கேட்பார். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கு சான்றாய் விளங்கியவர்.

4. மத்திய அரசில் இருந்து வரும் நிதி தொகையை  திருப்பி அனுப்பமாட்டார். இவர் முறை கேடாக பணத்தை அடுத்த துறைக்கு மாற்ற மாட்டார். இவற்றை மாவட்ட ஆட்சியரின் செயலை முதலமைச்சர் பார்வையிடுவார்.

5. கோவில்பட்டி பஞ்சாயத்து தலைவர்  ஈ.வெ.அ.வள்ளிமுத்து அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர வந்த போது, காமராஜர் அவர்கள் சம்பாதிக்கும் நோக்கில் கட்சிக்குள் சேர விரும்பினால் கட்சிக்குள் வர வேண்டாம் என்றாரே பார்க்கலாம்.

6. இவர் தொழிலாளர்களை அழைத்து மேலை நாடுகளுக்கு சென்று தொழில் வாய்ப்பை  பற்றி அறிந்து வந்து தொழில் செய்யுங்கள் அரசு உங்களுக்கு உதவி செய்யும் என்றார்.

7. இவர்  ஊருக்கு ஒரு பள்ளி, கூட்டுறவு சங்கம்,  பஞ்சாயத்து சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்து தந்தார். பஞ்சயாத்து தலைவர்களுக்கு பயிற்சி, விவசாயிகளுக்கு விவசாய பயிற்சி அளிக்க வழிவகை செய்தார்.

8. மின்சார விரிவாக்கத்திற்க்காக கிராம மின்சார திட்டம் வகுத்து பண பற்றாக்குறையால் திட்டம் தடை பட்டு விட கூடாது என்பதற்க்காக காப்பர் கடத்திகளுக்கு பதிலாக அலுமினிய கடத்திகளை பயன்படுத்த செய்தார்.

9. எதிர்க்கட்சி தலைவர் அறிஞர் அண்ணா தண்டலம் என்னும் கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு காமராஜரை வரவழைத்து உதவிகள் வழங்க செய்தார்.

10. அமெரிக்கா குடியரசு தலைவர் அறிஞர் அண்ணாவை சந்திக்க மறுத்ததால் காமராஜர் அமெரிக்கா குடியரசு தலைவரை சந்திக்க மறுத்து விட்டார்.

11. காமராஜர் தனது ஆட்சி காலத்தில் பல்வேறு அணைக்கட்டுகளையும், மின்சார நிலையங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினார்.

12. பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர்  பட்டம் அளிக்க முன் வந்த போது "வேறு  வேலை இருந்தால் பாருங்கள்" என்று கூறிய மகான் இவரே.

13. நாகர்கோவிலில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் காமராஜருக்கு எதிராக டாக்டர்  மத்தியாசையை  நிறுத்தினர். காமராஜர் அணைக்கட்டும் திட்டம்கொண்டு வர எண்ணினார். அதற்கு மத்தியாசை அணைக்கட்டு திட்டம் வந்தால் ரப்பர்  தோட்டம் பாதிக்கப்படும் என்பதற்க்காக எதிர்த்தார். காமராஜர் அதை மறுத்து     அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இவருக்கு மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால்,காமராஜர் இதை ஏற்க மறுத்துவிட்டார்.

14. காமராஜர் ஸ்ரீவிலில்லிபுத்தூர்  ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான பனை மரங்களை வெட்டி விட்டு நஷ்ட ஈடு கொடுத்து  மேலும்  ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு வேலையும் வழங்க வந்த போது அதை தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். தற்பொழுது அந்தஇடத்தில் பனை மரங்களும் இல்லை. தொழில் செய்ய ஆட்களும் இல்லை. அங்கு இப்போது கிரவல் மண் அள்ளப்படுகிறது.

15. ஸ்ரீவில்லிபுத்தூரில் கடும் தண்ணீர் பஞ்சம். காமராஜர் ஆட்சியில் இருந்தால், அழகர் அணைத்திட்டம் நிறைவேறியிருக்கும். அத்திட்டத்தின் மூலம் விருதுநகர் வரை பஞ்சம் தீர்ந்திருக்கும்.

16. எதிர்க்கட்சி  அரசியல் வாதிகள்  காமராஜ் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு பேசியது கண்டு அவரை பெற்ற தாய் வேதனைப்பட்டார். ஆனால், காமராஜ் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. எதிர்கட்சியினரை அவர் வசை பாடவில்லை, தன் தொண்டர்களையும் வசை பாட அனுமதித்ததில்லை.

17. காமராஜர் ஆலயங்களுக்கு சென்று வழிபடவில்லை. மக்கள் தொண்டே   மகேசன் தொண்டு என்று சொல்லி  “போற்றுபவர் போற்றட்டும், தூற்றுபவர் தூற்றட்டும், தொடர்ந்து செல்வோம்”  என்று பணியாற்றினார்.

18. மேலும் இவர் காந்தியடிகளின் 18  அம்ச திட்டங்களை குறைவின்றி நிறைவேற்றினார்.

முடிவு:

வருங்கால சந்ததியினர்  நல்ல வளத்துடன் வாழ காமராஜர் போன்றோர் அரும்பாடு பட்டனர்.

" பொன்  நாடார், பொருள்  நாடார்

தனை நாடார், தன்னலம் நாடார் "

என்று விளங்கும் தலைவனை தானே வரலாறு போற்றும். “இவர் தான் மனிதன்” என்று கண்ணதாசன் அவர்கள் குறிப்பிடுகிறார்.                             Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.