Made in 'தமிழ்நாடு' | Viral Story of a Tamil Brand

Made in 'தமிழ்நாடு' | Viral Story of a Tamil Brand

Made in Tamil Nadu:

நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் பொருட்களில் எத்தனை Made in India ?

இந்த கேள்வியை நமக்கு முதன் முதலில் வைத்தவர் யார் ?

நாங்கள் சொல்வது சரியென்றால் "நீயா நானா" புகழ் திரு. கோபிநாத் அவர்கள் தான். இந்த ஒற்றை கேள்வி எங்கள் கல்லூரி பருவத்தை பொறுப்புடன் கற்க மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. காலை எழுவதிலிருந்து, இரவு உறங்கும் வரை காணும் எந்த பொருளிலும் Made in India என்று காணமுடிந்ததே இல்லை, காலங்கள் ஓடின கல்லூரி காலத்தை முடித்து வேலை தேடிக்கொள்வதா இல்லை மேற்படிப்பு எதாவது தொடரலாமா என்று சில காலம் கழிந்தன, பிறகு தான் நாம் ஏன் ஒரு தொழில் தொடங்க கூடாது என்று சில நண்பர்களையும் கூட்டுசேர்த்து தமிழ் ஆடை நிறுவனம் தொடங்கினோம், ஆரம்பத்தில் எங்கள் தயாரிப்பில் "Made in India" - Brand of India என்று சந்தை படுத்தினோம். எனினும் பல தயாரிப்புகள் எ.கா. கைபேசி, கணினி, என அன்றாடம் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்கள் முழுமையான Made in India தயாரிப்பு என்று சொல்ல இயலாது. தொடங்கிய 2 ஆண்டுகளில் கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட சிக்கலால் அதிலிருந்து வெளியேறி புதிதாக எதாவது செய்வோம் என்று யோசித்துக்கொண்டிருதோம்.

அன்று "நீயா நானா" கோபிநாத் எழுப்பிய அதே கேள்வி தான் எங்களை மாற்றி சித்திக்க வைத்தது !

நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் பொருட்களில் எத்தனை Made in தமிழ்நாடு ?

ஏன் இதுவரை யாரும் இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளவில்லை ?

ஒரு முழுமையான "Made in தமிழ்நாடு" தயாரிப்பை முன்னெடுக்கவேண்டும் என்று பல போராட்டங்களுக்கு பின் தொடங்கியது தான் நம் "வில்வா தமிழ் ஆடைகள்" நிறுவனம். இதே காலகட்டத்தில் மேலும் சில வணிக நிருவனங்களும் தொடங்கினோம் VilvaKart.in - மரபு சார்ந்த பொருட்களை குறைந்த விலையில் உலகெங்கும் கிடைக்கும் வண்ணம், அனைத்தும் Made in தமிழ்நாடு என இருப்பதாய் உறுதிசெய்தோம். VilvaCrackers.com, VilvaNetworks.com தொழில்நுட்பம் ரீதியாக தமிழ் மக்களில், வளர்ச்சி என்பது 'வாடிக்கையாளர்' என்ற நிலையிலேயே இருக்கிறது. நாம் வாடிக்கையாளர் என்ற நிலையிலிருந்து கண்டுபிடிப்பாளர், தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயரும்போது தான் நாம் உண்மையிலேயே மேம்பட்ட சமூகமாக விளங்கமுடியும்.

Made in தமிழ்நாடு - கிடைத்த முதல் அங்கீகாரம் :
சமூக வலைத்தளங்கள் முழுதும் "Made in Tamil Nadu" குறியீடு தாங்கிய வில்வா தமிழ் ஆடைகளை பற்றி கடந்த 2018 ஆண்டு மே மாதம் பெரிதாக பேசப்பட்டது, ஒரே இரவில் வில்வா என்ற பெயர் அனைவரது WhatsApp status ஆக, முகநூல் பகிர்வாக மாறியதற்கு காரணமாக இருந்தது நமது வாடிக்கையாளர் ஒருவரின் முகநூல் பதிவே.

எதிர்பாராதவித்ததில் தனது பதிவிற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது, பல Memes உருவாகி தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். இது எல்லாவற்றுக்கும் காரணம் நமது தயாரிப்பு குறியீடு "Made In தமிழ்நாடு" ஒரு முழக்கமாக மாறி பெரிதும் பகிர காரணமாக அமைந்தது. பல ஆயிரக்கணக்கான பகிர்வுகளால் நமது வில்வாவின் பெயர் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் என பல நாட்டு மக்களை சென்றடைந்தது.

made-in-tamil-nadu

தொடங்கிய இடம்:
tamil-tshirts-post-in-facebookமுகநூலில் நமக்கு கிடைத்த இந்த பெரும் வரவேற்புக்கு ஆதி காரணமாக திகழ்தவர் நமது பாண்டிச்சேரி வாடிக்கையாளர் திரு. அசோக் ராஜ் அவர்களே, துவைத்த துணியை மடிக்கும் போது "Made In தமிழ்நாடு" என்று நமது ஆடை லேபிள்-ல்(Label) இருப்பதை கண்டு ஆச்சர்யத்தில் திகைத்தவர், தனது எண்ணத்தை உடனே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார், அவரது குறிப்பு "துவைத்த துணியை மடிக்கும் போது இதை பார்த்து எண்ணை அறியாமல் சிலிர்த்து தான் போனேன்". ஆடையை படம் எடுத்து அதனை அம்புக்குறி இட்டு காட்டியது ஆகச் சிறப்பு, அதன் பின்னூட்டமே முகநூலில்
ஜொலித்த வில்வாவின் வெற்றிக்கொடி.


வாடிக்கையாளர் திரு. அசோக் ராஜ் அவர்களுடனான உரையாடல்:
நான் பல முறை இந்த ஆடை அணிந்து உள்ளேன், இன்று தற்செயலாக மடிக்கும் போது பார்த்தேன் சரி எதற்கும் இருக்கட்டும் என்று படம் எடுத்து போட்டுவிட்டேன், நானும் இது இந்த அளவிற்கு பெரிதாக வரும் என எண்ணவில்லை. நிறைய தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாய் இருப்பதை இதன் மூலம் நான் உணர்ந்தேன். என்னோட நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு முடிந்தவரை நம் மொழி உள்ள ஆடை வாங்கவே அறிவுரை கூறிவருகிறேன், ஏதோ வேற்று மொழி ஆடை வாங்க செலவு செய்வதை விட, நமக்கு தெரிந்த தமிழ் மொழியில் வரும் ஆடைகளுக்கு செலவு செய்யலாமே என்பது என்னுடைய எண்ணம். நான் முதன்முதலில் ஆடையின் விளம்பரத்தை மின்னஞ்சல் மூலம் பெற்றேன், அப்போது சவுதியில் இருந்தேன், இந்தியா வந்ததும் தொடர்பு கொண்டு நேரில் சென்னை சேப்பாக்கம் அருகில் வைத்து வாங்கினேன். ஆடையின் விலையை விட, அதனை வாங்க செலவு செய்தது தான் அதிகம் என சொல்லி நகைத்தார். அனைத்தும் தமிழுக்காகவே என்றாலும், அனைத்து நாட்டிலும் கிடைக்கும் வகையில் சந்தை படுத்த வேண்டும் என அறிவுரை கூறினார்.


மேமே(Meme)-ன் சாதனை துளிகள்:

  • ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில், Whatsapp இல் 5க்கும் மேற்பட்ட மீம்கள் உருவாகி பகிரப்பட்டது.
  • தேசிய அக்னி சிறகுகள் பக்கத்தில் மட்டும் 15,000+ விருப்பம், 17,000+ பகிர்வுகள் பெற்றன.
  • தமிழ்நாட்டை உலக அரங்கில் சிறப்பு செய்து காட்டியது.

தமிழை நேசிப்பவர் அனைவரது நெஞ்சிலும் நீங்காது இடம்பிடிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, எனினும் இந்த தருணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நெஞ்சத்தில் ஆழமான இடம் கிடைத்திருப்பது எங்களை பணிவுடன் அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியுள்ளது. தமிழ் ஆடைகள் மட்டுமின்றி, நமது வில்வா நிறுவனம் படிப்படியாக வளர்ந்து உங்கள் பேராதரவுடன் மேலும் பல தயாரிப்புகளை, பொருட்களை 'Made in தமிழ்நாடு' என்ற குறியீட்டுடன் சந்தைப்படுத்தி உலகத்தமிழர்களின் அடையாளமாய் திகழ்ந்து வெற்றிக்காண்போம்.

"உங்கள் மகிழ்ச்சியே எங்கள் இலட்சியம்"

என்றும் உங்கள் அன்புடன் வில்வா குழுமம்.

Made in Tamilnadu Blog page ad image



Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.