பெண் பிள்ளைகளுக்கு தன் தந்தையை பிடிக்க இது தான் காரணமா?

பெண் பிள்ளைகளுக்கு தன் தந்தையை பிடிக்க இது தான் காரணமா?

மனதிற்கும், புத்திக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை?

பெண் பிள்ளைகளுக்கு தன் தந்தையை மிகவும் பிடிக்கும் !

ஆண் பிள்ளைகளுக்கு தன் தாயை ரொம்பப் பிடிக்கும் !

அது ஏன் ?

நீங்கள் இதுவரை நினைத்தது போல பால் இன வேறுபாடு எதுவும் கிடையாது.

புத்திக்கும் மனசுக்கும் விளையாட்டு


இங்கு தான் புத்தியும் மனமும் விளையாடும் சூட்சம அற்புதம் உள்ளது !

முதலில் புத்தி மற்றும் மனம் என்றால் என்ன ?

புத்தி = நல்லதா/கெட்டதா (True or False)
மனம் = பிடிச்சிருக்கா பிடிக்கலையா (Yes or No)

அதாவது புத்தி என்பது நல்லதா கெட்டதா என்று மட்டும் பார்க்கும், அதேபோல மனம் என்பது பிடிச்சிருக்கா பிடிக்கவில்லையா என்று மட்டும் பார்க்கும்.

பிடித்ததா பிடிக்காததா என்பது குறித்து புத்தி கவலை கொள்ளாது, நல்லதா கெட்டதா என்பது குறித்து மனம் கவலை கொள்ளாது.


காதலும் கல்யாணமும்:

உதாரணமாக காதலைச் சொல்லலாம் காதலில் விழுந்தவர்கள் ஆணோ பெண்ணோ தனக்குப் பிடித்தமானவரை மனதாரக் காதலிப்பார்கள். அப்படி காதலிக்கும் சமயத்தில் கண்டிப்பாக புத்தி வேலை செய்வதில்லை (செய்யவே செய்யாது). அதே சமயம் அந்தக் காதல் கல்யாணம் என்ற அளவிற்கு போகும் போது தான் புத்தி முழித்துக் கொள்ளும். அப்போது தான் நல்லதா கெட்டதா என்று பார்க்கத் தொடங்கும்.

அதாவது புத்தி என்பது நல்லதா கெட்டதா என்று மட்டும் பார்க்கும், அதேபோல மனம் என்பது பிடிச்சிருக்கா பிடிக்கவில்லையா என்று மட்டும் பார்க்கும்.

தந்தையும் மகளும்:

சரி இந்தக் கட்டுரையின் முதல் வரிகளுக்கு வருவோம்.

ஒரு தந்தையானவர் ஓரளவு நன்கு வளர்ந்த தன் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு வாழ்க்கையில் தேவையானதை கவனிக்கும் போது மகன் விடயத்தில் மட்டும் அவனது வயதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக புத்தியைக் கொண்டு தீர்மானங்கள் எடுப்பார் அதாவது நல்லது கெட்டது மட்டுமே பார்ப்பார். அவனுக்குப் பிடித்ததா பிடிக்கலையா என்பது இரண்டாம் பட்சம் தான்.

அதே சமயம் தன் மகள் விடயத்தில் தனக்கு அனுபவங்கள் ஏதும் இல்லை என்பதால் புத்தி ரிலாக்ஸாக ஓய்வு எடுக்கச் சென்று விடும். தனது அன்பான மனதின் மூலமாக மட்டுமே முடிவுகளை எடுப்பார். இதில் தன் மகளுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று மட்டுமே பார்ப்பார், இதனால் தந்தைக்கும் மகளுக்கும் அந்யோன்யம் கூடிக் கொண்டே இருக்கும். (கெமிஸ்ட்ரி கரெக்டாக இருக்கும்)

இது தாய் மற்றும் மகன் ஆகியோருக்கிடையில் அப்படியே உல்டாவாகப் பொருந்தும்.

இதையெல்லாம் கடந்து வயது முதிர்ந்த பின்னர் பேரன் பேத்திகள் எடுத்து அவர்கள் தாத்தா பாட்டி ஆன பிறகு பேரக்குழந்தைகள் விஷயத்தில் தங்களது புத்தியைக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, மனதை மட்டுமே உபயோகிப்பர்.

முடிவாக:

புத்தி என்பது நமது பற்கள் போல இடையில் வந்தது சீக்கிரம் போய் விடும். மனது என்பது நமது நாக்கு போல பிறப்பில் இருந்து இறப்பு வரை இருக்கும்.

இதில் மனதின் வழி வாழ்வதா? இல்லை புத்தியின் வழியில் வாழ்வதா?

மனதின் வழியில் வாழ்ந்தால் சந்தோஷம், ஆனந்தம், திருப்தி போன்றவை கிட்டும், புத்தியின் வழியில் வாழ்ந்தால் வெற்றி, களிப்பு, பெருமிதம், நிம்மதி போன்றவை கிட்டும்...

இரண்டையும் சரியாகப் பயன்படுத்தி வாழ்ந்தால் எல்லாமே முழுமையாகக் கிடைக்கும்...

வாழ்வினிது.
Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.