புலம் பெயர்தல் IT தமிழன் தொடர் - 2 | Migration IT Thamizhan Series Episode - 2

புலம் பெயர்தல் IT தமிழன் தொடர் - 2 | Migration IT Thamizhan Series Episode - 2

தொடர்-1யை படிக்க...

இந்த தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனை. | In This Series All Characters and Events are Imaginary

IT தமிழன்

சில மணிநேரங்களில்

அப்பா மண்ணுலகை விட்டுப்பிரிந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்தது.

துக்கம் தொண்டை அடைக்க ஓவென குரலெடுத்து அழக்கூட இயலாது. மேனேஜரின் அறைக்கு ஓடினேன்.

அந்த நிறவெறிப் பிடித்த ரிச்சர்ட் முகத்தை அஷ்டகோணலாக வைத்து என்னவெனக் கேட்டான்.

"ரிச்சர்ட் மை பாதர் லெப்ட் அஸ் ஜஸ்ட் நவு"

"ஐயம் சாரி சிவா." என பைல்களை புரட்டினான்.

" ஐ நிட் எ பிரேக் ரிச்சர்ட்"

" யா ஒய் நாட் ? ஃபினிஸ் யுவர் ப்ரோஜக்ட் அண்ட் டேக் த நெக்ஸ்ட் ப்ளைட் "

நரம்பை தாண்டி கொப்பளித்த கோபத்தை பொறுத்துக் கொண்டு பேசத் துவங்கலானேன்.

" ரிச்சர்ட் இட் டேக்ஸ் எ வீக், ஐ நீட் டு கோ டுமாரோ" என கூறிக் கொண்டு இருக்கையில் வாய் மட்டுமே பேசியது. நினைவுகள் என் பால்ய காலத்தில் தூக்கி வளர்த்த அப்பாவினை சுற்றி வந்தன. அந்த நாட்கள்.அந்த பசுமை.

நிகழ்காலம் நகரத்தில் அடைப்பட்டது போன்றதோர் உணர்வு.

"சீ சிவா திஸ் ப்ரோஜெக்ட் இஸ் இம்பார்ட்டண்ட்"

என ப்ராஜெக்ட்டையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான். மனிதத்திற்கு இந்த காலத்தில் மதிப்பு இவ்வளவு தான் என தொடர்ந்த பேச்சு வாதமானது.


முடிவில் " திஸ் இடியாட்டிக் எமோஷனுல் இந்தியன்ஸ். சீ யுவர் டாட்ஸ் ப்யூனரல் லைவ் இன் ஸ்கைப் ஆர் எப்.பி அண்ட் கோ டூ யவர் கேபின் நவ். இட்ஸ் கெட்டிங் லேட்" என கத்தினான்.


" ரிச்சர்ட் இட்ஸ் க்ரூயல்"
என்றேன். அந்த நிலைமை எவனுக்குமே வரக் கூடாது. தன்னை பெற்ற தந்தையின் இறுதி மரியாதையை செய்யக்கூட கெஞ்சி கூத்தாடி தன்மானமின்றி நிற்க வைத்துள்ள காலம் கல் நெஞ்சானது.


" தென் ரிசைன் த ஜாப் அண்ட் கோ டு யுவர் இந்தியா " என ரிச்சர்டு சொன்ன போது அவனின் வன்மம் புரிந்தது. அது பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு புலம்பெயர் இந்தியர்களின் மீதான வெறுப்புணர்வு.

நான் கேபினுக்கு நடந்தேன். தமுவிடம் விடயத்தை கூறினேன். அழுதுகொண்டே .

" உனக்கு எது சரின்னு படுதோ ? அத செய். எனக்காகவும் அம்முக்காகவும் கன்வைன்ஸ் ஆகாத" கூறினாள்.

ரெசிக்னேஷன் லெட்டரை ரிச்சர்டிடம் கொடுத்த போது அதிர்ச்சியாக என்னைப் பார்த்தான்.

உன்கிட்ட பிச்ச எடுக்க பதிலா செத்துருவேன்.த்தா ..தமிழன்டா என எனக்குள் கூறிக் கொண்டு சிரித்துக் கொண்டே

" யுவர் ப்யூனரல் வில் நாட் பி எ குட் ஒன் ரிச்சர்ட். ஐ விஷ் யூ இன் அட்வான்ஸ் " எனக் கூறி நகர்ந்தேன்.

விமான நிலையத்தின் அறிவிப்பு பலகையில் சென்னைக்கான விமானம் வந்தடைந்து இருந்தது.

" அந்த மண்ணுக்கு என்னால முடிஞ்சத செய்யணும் " எனச் சொல்லிக்கொண்டு தமயந்தியை தட்டி எழுப்பி விமானத்தை நோக்கி நடந்தேன். இனிவரும் காலங்களில் ஐடி தொழிலை உதறி இயற்கை விவசாயி ஆனவர்களின் பட்டியலில் என் பெயரையும் காணலாம்.

தன்மானம் தமிழர்க்கு அழகு.Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.