Tamil Years and Month calendar | தமிழ் வருடங்களும் மாதங்களும்
தமிழ் வருடங்களும் மாதங்களும்
தமிழ் வருடங்கள் மொத்தம் 60 உள்ளன. இதனை கால சுழற்ச்சி முறை என்றும் கூறலாம். தமிழ் மாதங்கள் மொத்தம் 12 உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் 29 - 32 நாட்கள் வேறுபட்டு வருகின்றன.
Tamil | Sanskrit | English | Years |
---|---|---|---|
நற்றோன்றல் | பிரபவ | Prabhava | 1987–1988 |
உயர்தோன்றல் | விபவ | Vibhava | 1988–1989 |
வெள்ளொளி | சுக்கில | Sukla | 1989–1990 |
பேருவகை | பிரமோதூத | Pramodoota | 1990–1991 |
மக்கட்செல்வம் | பிரசோற்பத்தி | Prachorpaththi | 1991–1992 |
அயல்முனி | ஆங்கீரச | Aangirasa | 1992–1993 |
திருமுகம் | சிறிமுக | Srimukha | 1993–1994 |
தோற்றம் | பவ | Bhava | 1994–1995 |
இளமை | யுவ | Yuva | 1995–1996 |
மாழை | தாது | Dhaatu | 1996–1997 |
ஈச்சுரம் | ஈசுவர | Eesvara | 1997–1998 |
கூலவளம் | வெகுதானிய | Vehudhanya | 1998–1999 |
முன்மை | பிரமாதி | Pramathi | 1999–2000 |
நேர்நிரல் | விக்ரம | Vikrama | 2000–2001 |
விளைபயன் | விச | Vishu | 2001–2002 |
ஓவியக்கதிர் | சித்திரபானு | Chitrabaanu | 2002–2003 |
நற்கதிர் | சுபானு | Subhaanu | 2003–2004 |
தாங்கெழில் | தாரண | Dhaarana | 2004–2005 |
நிலவரையன் | பார்த்திப | Paarthiba | 2005–2006 |
விய | விரிமாண்பு | Viya | 2006–2007 |
முற்றறிவு | சர்வசித்து | Sarvajith | 2007–2008 |
முழுநிறைவு | சர்வதாரி | Sarvadhari | 2008–2009 |
தீர்பகை | விரோதி | Virodhi | 2009–2010 |
வளமாற்றம் | விக்ருதி | Vikruthi | 2010–2011 |
செய்நேர்த்தி | கர | Kara | 2011–2012 |
நற்குழவி | நந்தன | Nandhana | 2012–2013 |
உயர்வாகை | விசய | Vijaya | 2013–2014 |
வாகை | ஜய | Jaya | 2014–2015 |
காதன்மை | மன்மத | Manmatha | 2015–2016 |
வெம்முகம் | துன்முகி | Dhunmuki | 2016–2017 |
பொற்றடை | ஹேவிளம்பி | Hevilambi | 2017–2018 |
அட்டி | விளம்பி | Vilambi | 2018–2019 |
எழில்மாறல் | விகாரி | Vikari | 2019–2020 |
வீறியெழல் | சார்வரி | Sarvari | 2020–2021 |
கீழறை | பிலவ | Plava | 2021–2022 |
நற்செய்கை | சுபகிருது | Subakrith | 2022–2023 |
மங்கலம் | சோபகிருது | Sobakrith | 2023–2024 |
பகைக்கேடு | குரோதி | Krodhi | 2024–2025 |
உலகநிறைவு | விசுவாசுவ | Visuvaasuva | 2025–2026 |
அருட்டோற்றம் | பரபாவ | Parabhaava | 2026–2027 |
நச்சுப்புழை | பிலவங்க | Plavanga | 2027–2028 |
பிணைவிரகு | கீலக | Keelaka | 2028–2029 |
அழகு | சௌமிய | Saumya | 2029–2030 |
பொதுநிலை | சாதாரண | Sadharana | 2030–2031 |
இகல்வீறு | விரோதகிருது | Virodhikrithu | 2031–2032 |
கழிவிரக்கம் | பரிதாபி | Paridhaabi | 2032–2033 |
நற்றலைமை | பிரமாதீச | Pramaadhisa | 2033–2034 |
பெருமகிழ்ச்சி | ஆனந்த | Aanandha | 2034–2035 |
பெருமறம் | ராட்சச | Rakshasa | 2035–2036 |
தாமரை | நள | Nala | 2036–2037 |
பொன்மை | பிங்கள | Pingala | 2037–2038 |
கருமைவீச்சு | காளயுக்தி | Kalayukthi | 2038–2039 |
முன்னியமுடிதல் | சித்தார்த்தி | Siddharthi | 2039–2040 |
அழலி | ரௌத்திரி | Raudhri | 2040–2041 |
கொடுமதி | துன்மதி | Dunmathi | 2041–2042 |
பேரிகை | துந்துபி | Dhundubhi | 2042–2043 |
ஒடுங்கி | ருத்ரோத்காரி | Rudhrodhgaari | 2043–2044 |
செம்மை | ரக்தாட்சி | Raktakshi | 2044–2045 |
எதிரேற்றம் | குரோதன | Krodhana | 2045–2046 |
வளங்கலன் | அட்சய | Akshaya | 2046–2047 |
இந்த 60 வருடங்களும் சுழற்சி முறையில் மறுபடியும் அடுத்த 60 வருடங்களுக்கு இந்த பெயர்களோடு வரும்.
வரலாறு :
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்) விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காணமுடிகின்றது. எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 - 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இராசிச்சக்கரத்தோடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன. ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.
தமிழகத்தில் 60 அறுபது ஆண்டு சுழற்சி முறைதமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு. விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.
Comments