ஸ்ரீ கோதை நாச்சியாரின் சீர்மையும் பெருமையும்

எப்படி?

பதிவு-1

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றவுடன் நினைவுக்கு வருவது ஸ்ரீ ஆண்டாள் கோவில் கோபுரம் மற்றும் பால்கோவா தான். பின் கோவிலுக்கு மேற்கு பக்கம் உள்ள பெரிய குளம் ஸ்ரீ பாராங்குச பாண்டிய மன்னரால் வெட்டப்பட்டது கட்டப்பட்டது என்று சொல்வர்கள். இந்த குளம் 1000 ஏக்கர் பாசன வசதிகள் கொண்டது. இங்குள்ள மூன்று மடைகள் பெரிய மடை, சிவிலி மடை மற்றும் சின்ன மடை ஆகும். இந்த மடைகள் வழியாக தான் தண்ணீர் பல இடங்களுக்கு சென்றடைகிறது . பெரிய மடையில் உள்ள ஒரு அதிசயம் என்னவென்றால் இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் பகிர்ந்தளிக்கும் வகையில் பாசனத்துக்கு தகுந்த முறையில் ஒழுங்கப்படுத்தபட்டுள்ளது. புகழ்பெற்ற இந்த ஊர் கோபுரம் 192 அடி உயரம் கொண்டது. ஆதி காலத்தில் இந்த கோவில் பாடலீஸ்வரர் (சிவன்) பெயர் கொண்ட சைவ கோவிலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. 1960 -ம் ஆண்டுகளில் இந்த கோவிலின் மூலஸ்தானத்தை திறக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் வலுவாயிருந்தது உண்மையானதாகும்.

இங்குள்ள கோபுரம் ஸ்ரீவல்லபபாண்டியன் என்னும் மன்னரால் கட்டப்பட்டது என்பர். முற்காலத்தில் இவ்வூர் 'புத்தூர்' என்று வழங்கப்பட்டு பின் 'ஸ்ரீபாராங்குசபுத்தூர்' என்று மருவி பின் 'ஸ்ரீவல்லபபாண்டியன்புத்தூர்' என்று திரிந்து "ஸ்ரீவில்லிபுத்தூர் " என்று மாறியது என்பர்.

வால் பகுதி:

ஒரு தனவான் இருந்தார். அவருக்கு ஒரு பண்ணையாள். இருவர் பெயரும் ஒரே பெயர். அந்த பெயர் சொல்லி கூப்பிடும் போது முதலாளிக்கு மிகவும் இக்கட்டாகவே இருந்தது. ஆகையால் வேலைக்காரனை அழைத்து நீ சென்று உன் பெயரை மாற்றி வைத்து கொண்டு வா என்றார். பண்ணையாள் 'சரிங்க முதலாளி' , ஆனால் நிறைய செலவாகும் என்றான். எனவே அதற்கு வேண்டிய கணிசமான தொகை பெற்று கொண்டு போய் ஒரு வாரம் கழித்து வந்தான். பின் பெயர் , மாற்றி கொண்டு திரும்பி வந்தவனிடம், என்ன பெயர் மாற்றி கொண்டு வந்தாய் என்று வினவினார். ஆமாம் முதலாளி என்னுடைய பெயர் "பெரிய பெருமாள்" என்றானே பார்க்கலாம் எப்படி?

பதிவு-2

"ஆத்தாளை ஆண்டாள் நாச்சியாரை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை பைந்தமிழ் உரைத்தாளை பாவை நோன்பு நோற்றாளை கை தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே "

இவ்வூர் ஒரு வைணவ தலம். அரங்க அண்ணல் (ரெங்க மன்னார்) குடி கொண்டு அருள் பாலிக்கும் ஊர் இது . பெரியாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் புகழ் வாய்ந்தவர்களுள் ஒருவர். இவர் தினமும் நந்தவனத்தில் பூக்கொய்து , மாலை தொடுத்து அரங்க அண்ணலுக்கு (ரெங்க மன்னாருக்கு) அணிவித்து வழிபாடு செய்து தொண்டு செய்து வந்தார். இவ்வாறு இறைவனுக்கு பல வழிபாடு செய்தும் தனக்கு குழந்தையில்லையே என்று வருந்தினார். ‘வாராது வந்த மாமழை ‘ போல் ஒரு நிகழ்வு நடந்தது.......

இந்த ஊருக்கு அருகில் நாச்சியார்பட்டி என்ற சிற்றூர் இருந்தது. (தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாச்சியார்புரம் என்னும் ஒரு தொடர் நினைவுகூறத்தக்கது). பாண்டிய நாடு 12 வருடங்கள் வற்கடம் (பஞ்சம்) பூண்டது என்று கூறுவர். எங்கும் பஞ்சம் இந்நேரத்தில் இவ்வூர் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவர்களால் குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் பெரியாழ்வாரை அணுகி முறையிட்டனர். பெரியாழ்வாரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி குழந்தையை நந்தவனத்தில் துளசி மாடத்திற்கு அருகில் விட்டுச்செல்க என்று கூறியதால் , அவர்களும் அப்படியே செய்தனர். பெரியாழ்வார் அங்கு சென்று பார்த்த போது கைகுழந்தையின் அழகு “அழகோ அழகு “ , “கித்னா சுந்தர்” , “The beauty thy name is women , The nonpareil of beauty , She teaches the torches to burn “ என்றும் கூறலாம். பெரியாழ்வார் குழந்தையை எடுத்து கொண்டு போய் தன் துணைவியாரிடம் கொடுத்தார். பின் பெரியாழ்வாரும் அவரது துணைவியாரும் நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்" குழந்தையை பேணி பாதுகாத்து வளர்த்து வந்தார்கள்.

ஆண்டாளை தனது குழந்தையாக வளர்த்து வந்த பெரியாழ்வார் தினமும் ரெங்க மன்னாருக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்த பின் தான் தனது உணவை உட்கொள்வார். ஆண்டாளும் பெரியாழ்வாருடன் சேர்ந்து வழிபாடு நிகழ்த்துவார்.

பெரியாழ்வார் ஒரு பெரிய மேதை. பல மறைகளையும் மறை சார்ந்த நூல்களையும் ஓதி உலகளந்த வித்தகர். எனவே இவர் குழந்தைக்கு தகுந்த வேத ஞானத்தை சிறு வயதில் இருந்து கற்பித்து வந்தார். அதனால் தான் கோதை என்றழைக்கப்படும் ஆண்டாள் பாவை பாடும் திறம் பெற்றார் எனலாம்.

கோதை தினமும் அதிகாலையில் எழுந்து தெப்பத்தில் நீராடி அரங்க அண்ணலுக்கு வழிபாடு செய்ததால் அவர் மீது தீராத பக்தியும் அன்பும் கொண்டார். மார்கழி திங்களில் மதிநிறைந்த நன்னாளில் ஆயர் குல சிறுமிகளையும் எழுப்பி பாவை நோன்பு மேற்கொண்டு பரமனை பாடி பரவசம் மேற்கொள்வாள்.

தனது இளமை காலத்தில் இறைவன் மீது இருந்த அளவற்ற அன்பு காரணமாக அவரை தனது கணவராக பாவித்து தன் தந்தை தொடுத்து வைத்திருந்த மாலைகளை அணிந்து கொண்டு இறைவனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று பார்த்துகொள்வாள். ஒரு நாள் அந்த மாலையில் தலைமுடி இருப்பதை அறிந்த பெரியாழ்வார், ஆண்டாளை கடிந்து கொண்டார். அதன் பின் வேறு மாலைகளை இறைவனுக்கு சாற்றினார். இறைவன் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிய மாலைகளே தனக்கு உகந்தவை என்று கூறினார். ஆண்டாள் சூடி கொடுத்த மாலைகள் மதுரை அழகருக்கும் , திருப்பதி தெய்வத்திற்கும் அணிவிக்கப்படுகிறது.

“வாரணம் ஆயிரம்புடை சூழ முத்தடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ் மைதுனன் நம்பிம துசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கன்டேன் தோழி” என்று மணந்தால் அரங்கனையே மணப்பேன் என்று கூறினாள். எனவே இறைவன் பெரியாழ்வார் கனவில் தோன்றி கோதையை அழைத்துக்கொண்டு திருவரங்கம் வருமாறு கூறினார். பெரியாழ்வாரும் கோதையை அழைத்து சென்றார். ஆலயத்தில் இறைவனுக்கு வழிபாடு செய்ய, பெருமாளின் கர்ப்பகிரகம் சென்று காற்றில் கரைந்து இறைவன் ஆருயிரோடு இரண்டற கலந்தாள் ஆண்டாள். “All vanished into the air into the thin air”

ஆண்டாள் பாசுரங்கள்: திருப்பாவை -30, திருவாய்மொழி -143

ஆண்டாளின் காலம் கி.பி 731 (8-ம் நூற்றாண்டு)

வால் பகுதி:

சிலர் நம்ப மாட்டார்கள். திருஞான சம்பந்த பெருமான் தீயில் இறங்கி பக்தர்களோடு காற்றில் கலந்தார். அருணை முனிவரும் (அருணகிரிநாதர் ) கிளியாக மாறி வானில் பறந்து மறைந்தார். வள்ளல் பெருமானும் (ராமலிங்க அடிகளார்) சோதியில் கலந்து காற்றில் மறைந்ததும் நினைவு கூற தக்கது. "நம்பியவர்களுக்கு நடராசா நம்பாதவர்களுக்கு எமராசா "

ஒரு வால் பையன் சொன்னான். ஞான சம்பந்தர் கூட்டத்துடன் தீயில் இறங்கி சொர்க்கம் சென்றதை போல நானும் நெருப்பில் இறங்கி சொர்க்கம் போக வேண்டும் என்றானே பார்க்கலாம் எப்படி?

மேலும் படிக்கMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.