"திருக்குறள்" அறிந்திடாத உண்மைகள் | Thirukkural Unknown facts

"திருக்குறள்" அறிந்திடாத உண்மைகள் | Thirukkural Unknown facts

திருக்குறள் பற்றி நாம் யாரும் அறிந்திடாத ஆச்சர்யமூட்டும் உண்மைகள் | Surprising facts that nobody knows about Tirukkural.-

Thiruvalluvar Statue - Kanyakumari, Tamilnadu - Author of Thirukkural

திருவள்ளுவர், திருக்குறள் என யார் கேட்டாலும் உலக மக்கள் அனைவருக்கும் தெரியும், உலக மக்கள் முன்னிலையில் பெருமிதமாக நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் படியும், அனைவராலும் 'வள்ளுவர்' என் நாட்டில் பிறந்து இருக்கக்கூடாதா என பொறாமை கொள்ளும் அளவுக்கு பெருமையை தேடி சேர்த்தவர் நம் தமிழ்நாட்டு திருவள்ளுவர். இப்பெரும் புகழுக்கு முக்கிய காரணம் அறிவியல் கண்டுபிடிப்போ அரசவை ஆண்ட திறமையாலோ இல்லை, ஒரு சாதாரண புலவராக வளர்த்த சங்க காலத்தில் சாதி, மதம் என இரண்டையும் உடைத்தெறியும் தன் அறிவாலும், சிந்தனையாலும் வள்ளுவன் உருவாக்கிய இரண்டு அடியே, இல்லை ஒன்றே முக்கால் அடி.

Thiruvalluvar & Thirukural, these words are known to the whole world as the greatest teaching the way of living to the people of this world, every nation has thought of that this person should have been born in our nation. The main reason for this popularity is not his invention of science or his ability to rule the literature of state, but his intellect and thought to break down both caste and religion during the Sangam period as a common scholar.

திருக்குறள் இயற்ற பெற்றதன் காரணம்:

இன்றைய நிலையை விட, சங்க காலத்தில் சாதி, மத அரசியல் பெரியதாக இருந்ததற்கு பல்வேறு Thirukkural written in palm leaves manuscript in olden daysசான்றுகள் உள்ளன. மக்கள் யாரும் தெளிவு பெற்று விடக்கூடாது என்னும் நோக்கில் ஆரியர்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் போன்ற நூல்களை மக்களிடம் சென்று அடையாமல் மறைத்து உள்ளனர்.

The reason for the Tirukkural enactment is:

Various Thirukural written in palm leaves and manuscript in the olden days are evidence that caste and religious politics were larger during the Sangam era than it is today. The Aryans have hidden the texts of the Rig, Yasur, Sama and Atharvamana without reaching out to the people. So that no one can get clear.

இந்நிலையில் அறம், பொருள், இன்பம் என வாழ்க்கைக்கு தேவையான 3  அறநெறிகளை உலகமக்கள் அனைவருக்கும் பொதுவாக சொல்லும் நூலாக திருக்குறள் இருக்கிறது. சாதி, மொழி, மதம் என எதற்கும் வள்ளுவர் இந்நூலில் இடம் அளிக்கவில்லை. உலக மக்கள் அனைவரும் எந்த ஒரு சலனமும் இன்றி திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை படித்து புரிந்து கொள்கிறபோது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞர் என உலக மக்களின் மனதில் பதிகிறார்.

Thirukural is the most commonly quoted book in the world for the three virtues of life, such as charity, material and pleasure. Caste, language and religion are not included in this book. Thiruvalluvar is a social reformist scholar people who reads and understands what is said in Tirukkural without any temptation.

திருவள்ளுவரைப் பற்றிய சில அறியா உண்மைகள்:

சிறு வயது முதல் நமக்கு பயிற்றுவிக்கப்பட்டது திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். சிலர், அவர் மதுரை தமிழ் சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றினார், நெடுஞ்செழிய பாண்டியனது அரசவை கவி ஆகவே அவர் மதுரையில் பிறந்தார் எனவும் சொல்கின்றனர். சிலர் அவரது முதல் குறளில் "ஆதி பகவன் முதற்றே உலகு" என கூறியதன் மூலம் அவர் ஆதி-பகவன் தம்பதியின் மகனாக இருக்க வாய்ப்பு எனவும், வாசுகியை மணந்தவர் என சொல்கின்றனர். இதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் சில ஆச்சர்யமான உண்மைகளையை வெளிக்கொணர்ந்து இருக்கிறது. திருவள்ளுவர் கி.மு. 31-ல் பிறந்து இருக்கிறார், ஆக இந்த வருத்துடன் (2018) பிறந்து 2049 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதரமாகக் கொண்டு தி.மு, தி.பி என காலத்தைப் பிரித்து பயன்படுத்துகின்றனர். பொன்னோ, பொருளோ கேட்பாரற்று கிடந்தால் எவரும் தனது, என உரிமைகோருவர் இல்லையா? அப்படி உருவம் பெற்றது தான் வள்ளுவரின் தோற்றம், அவர் முன் வாழ்ந்த புலவர் பற்றிக்கூட தகவல் பெரிதும் இருக்க வள்ளுவரை பற்றிய தகவல் பெரிதும் இல்லாதது வியப்பு தான்.

Some Unknown Facts About Thiruvalluvar:

We were taught from an early age that Thiruvalluvar was born in Mylapore, Chennai. Some say that he was born in Madurai as a poet of the highland Pandiyan Raja. Some say that in his first allegation, "Adi Bhagavan is the first", he is likely to be the son of Adi-Bhagavan and married Vasuki. There is no scientific evidence for this. But recent research has uncovered some facts. Thiruvalluvar BC He is born on 31st and therefore 2050 years from this year (2019). The Tamil people use the term தி.மு & தி.பி to support his birth year. If there is no gold or substance, no one claims to be his? It is surprising that Valluvar's appearance is such a figure, that there is not much information about Valluvar in the past.

வள்ளுவர் வரலாற்று உண்மை:

வள்ளுவர் ஒரு கிறித்துவர் என சிலரும், சமண மதத்தவர் என சிலரும், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி அவரவர்கள் தங்களுக்கான பங்கிற்கு சான்றுகள் அளிக்க ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையோ வள்ளுவர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தில் பிறந்தவர், ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டது வள்ளுவர் "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்" ஆண்ட போது தன் திருக்குறளை புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்தாரென்று. ஆக கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் வள்ளுவர் என்ற மனிதன் வாழ்ந்ததும் அவன் எழுதியது தான் திருக்குறள் என்பது தெரியவருகிறது. ஆனால் அவரை பற்றிய மற்ற தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

The historical fact of Valluvar:

Some people think Valluvar is a Christian, some say he is a Jain follower, and some even say him as a Buddhist. The historical fact is that Christianity was not shaped by his time. Everyone is celebrating with the ideas in his works. But he was born during the period, when Tamil was nurtured with the establishments called Sangam, research shows that Valluvar introduced his Thirukkural in the midst of the scholars at the kingdom of "Aryapadai kadantha Neduncheliyan". It is revealed that Thirukkural was written by a man named Valluvar when he lived. But other information about him has been destroyed.

வள்ளுவரின் மனம்:

வள்ளுவர் கற்பனையான கடவுள்களை ஏற்கவில்லை என்பது, அவர் தனது குறட்பாக்களில் ஒரு முறை கூட "கடவுள்" என்ற சொல் பயன்படுத்தாமல் இருந்ததன் மூலம் அறியலாம். கூடவே சாதி, மதம், மொழி என எதனையும் அவர் அடையாளப்படுத்தவில்லை. அனைவரையும் கற்கும் படி வற்புறுத்தியவர், அதன் படி பொய் பேசாமலும், களவு தொழிலில் ஈடுபடாமலும் நாகரீகத்தோடு வாழவே எண்ணினார். அவர் எழுதிய திருக்குறளில், குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் வாழவேண்டும், ஆட்சியாளர்கள் மனித நேயத்துடன் மக்களாட்சி புரிய வேண்டும் என்பதையே மைய கருத்தாக வைத்திருந்தார்.

Valluvar's mind:

The fact that Valluvar did not accept imaginary gods is evident from the fact that he never once used the word "God" in his notebooks. He did not identify with caste, creed or language. He urged everyone to learn, and accordingly, he intended to live in civilization without lying or stealing. In his writings, the central focus is on living the family life systematically and characteristically, and that the rulers must be humane and democratic.

உலக பொதுமறை திருக்குறள்:

உலகப் பொதுமறை என அனைவராலும் ஏற்கப்படும் விதத்தில் குறள்- வெண்பாக்களால் ஆன செய்யுள்களை கொண்ட நூல் திருக்குறள். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்வது போல் அமைந்துள்ளது ஒவ்வொரு திருக்குறளும். எந்த ஒரு சாமானியனும் ஏற்கும் படியான கருத்துக்கள் உள்ளதால் என்னவோ பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

World's Public Workshop:

Thirukural, a book is accepted by everyone as a global Knowledge Source. Each tirukural seems to tell the listener what to do in the villages, by simply instructing one by just sitting on the platform/stages and listen to him. There are many world languages that Tirukkural have been translated for the world by virtue of any common sense.

திருவள்ளுவர் பற்றிய 'திருவள்ளுவ மாலை':

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான். ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன, அதில் ஒரு பாடல்:

Thiruvalluvar Evening of Thiruvalluvar:

There are some sects among the lower castes named Thiruvalluvar and Valluvan. Some of the stories from time to time and some of the songs in the book 'Thiruvalluvamalai' written in 1050 AD suggest that he was of ancient Tamil Race. That's one of the concerns. But only understand that there is some kind of conflict between Valluvar and other scholars. Thiruvalluvar has written several short stories against caste and religious ideas. There are some songs in the Thiruvalluvar malai that point to one of these songs:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்

போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி

வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்

சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று"

“I think the energy is gone

He praised and wrote on the side of the paper - writing the paper

Valluvannar Muppalai expert and not

Despite the energy"

திருவள்ளுவருக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரங்கள்:

தமிழக முதல்வர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களால் 1975-ம் ஆண்டு திருவள்ளுவரை அங்கீகரிக்க முக்கடல் கூடும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய தீவில் திருக்குறளின் அதிகாரங்களை நினைவு கொள்ளும் படி 133 அடி சிலையை நிறுவ ஆணைபிறப்பிக்கப்பட்டது. 2000-வது ஆண்டில் சுமார் 7000கி எடையில் க்ரானைட்(Granite) கல்லினால் திருவள்ளுவரின் திருவுருவ சிலை வடித்து அப்போதைய முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்களால் நிறுவப்பட்டது. தீவிற்கு சென்று வள்ளுவரை காணும் வகையில் படகு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரின் மைய பகுதியில் திருவள்ளுவரின் நினைவாக கோவில் தேரை போல் ஒரு கல் தேரினை உருவாக்கி உலக மக்கள் அனைவரும் எளிதில் வரக்கூடிய இடத்தில் அதனை நிறுவி அப்பகுதியை "வள்ளுவர் கோட்டம்" என பெயரிட்டு சிறப்பித்தது தமிழக அரசு. 1330 குறட்பாக்களும் அங்கு உள்ள பெரிய அரங்கில் மக்கள் பார்வைக்கு பொறிக்கப்பட்டுள்ளது. அரங்கம் 4000 பேரை கொள்ளும் அளவில் பெரியதாய் உள்ளதால் மக்கள் எந்தவொரு சிரமமும் இன்றி திருக்குறளையும் அதன் அர்த்தங்களையும் உணர முடியும்.

Thirukkural view from long distance at Valluvar kottam, chennai

Thirukkural inscription in Valluvar Kottam Car

திருவள்ளுவர் "கண்ணுடைய ரென்பவர் கற்றோர்" என கூறியதை மெய்ப்பிக்கும் விதத்திலும் அவர் கௌரவிக்கும் நோக்கிலும் தமிழக அரசு வேலூர் மாவட்டத்தில் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தை நிறுவியது. இக்கல்வி நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கூடலூர் முதலான மாவட்ட மக்களுக்கு கல்வி கற்க பெரிதும் உதவி வருகிறது.

உலகமே போற்றும் நமது திருவள்ளுவருக்கு கோவில் எழுப்பி அமெரிக்க நாடும் அவரது பெருமையை போற்றியது. இஃது வள்ளுவருக்கு எழுப்பிய இரண்டாவது கோவில் ஆகும். இதனை போலவே உலக நாடுகள் பலவும் திருவள்ளுவரின் சிலைகளையும் அவரது பெயரை சில நகரங்களுக்கு சூட்டியோ பெருமை படுத்தி வருகின்றன.

Authorizations granted to Thiruvalluvar:

In 1975, Tamil Nadu Chief Minister MG Ramachandran ordered the installation of a 133-foot statue to commemorate the kurals of Thirukural on a small island in the Kanyakumari district. In the year 2000, Thiruvalluvar statue weighing 7000 kg made by granite was erected by the Chief Minister, Mr M. Karunanidhi. A Boat service was also arranged to see Valluvar on the island

In the central part of Chennai city, the Tamil Nadu government named a place as Valluvar Kottam and as a temple structure built a stone chariot in the name of Thiruvalluvar. There are 1330 kuralslined up in the large arena. As the stadium is large enough to accommodate 4000 people, people can feel the thirukkural and its meanings without any difficulty.

The Government of Tamil Nadu established a major University in Vellore district in order to prove and honour Thiruvalluvar's claim to be "an eye-opener learner". The institute is greatly helping to educate the people of Vellore, Thiruvannamalai, Villupuram and Cuddalore districts.

Even a temple was built by the whole world at America admiring his pride. This is the second temple built for Valluvar. Similarly, many other countries have erected statues of Thiruvalluvar boast his name for streets in several cities.

சமீபத்திய முயற்சி திருக்குறள் மலை:

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் அறிவாற்றலையும் சாதனைகளையும் நாம் இன்று அறிய உதவுவது நமது தமிழர்களின் சிறந்த பழக்கமான பதிவிடுதலே ஆகும். எந்தவொரு நிகழ்வாயினும், சிறியதோ பெரியதோ அதனை எழுத்து வடிவில் கல்வெட்டிலோ இல்லை ஓவிய வடிவில் சுவற்றிலோ வடித்தனர், இதன் மூலம் நாம் இன்று வரை அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை அறிந்து மெய்சிலிர்த்து வருகிறோம். அதனை போலவே இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் திருவள்ளுவரின் திருக்குறள் அழியாமல் காக்க எடுக்கப்படும் பெரும் முயற்ச்சியே திருக்குறள் மலை. மொத்தமுள்ள 1330 குறட்பாக்களை கல்வெட்டாக ஈரோடு அருகில் உள்ள மலையில் பொறிக்க வேலைகள் நடந்து வருகின்றன. தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாக படிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் குறிப்புடன் இருக்கும் அமைப்பினர் மிக பெரிய அளவில் திட்டமிட்டுள்ளனர்.

Latest attempt Tirukkurali mountain:

It is the best practice of our Tamils to help us know the intellectual achievements of the Tamils who lived thousands of years ago. In any event, small or large, it was written in a written inscription, not in a sketchy wall, so that we are aware of the events of that period to this day. Similarly, even though it is still ten thousand years, the Tirukkural hill is a great effort to keep Thiruvalluvar's Tirukkural immortal. A total of 1330 kurals are being inscribed on the hill near Erode. Organizers with a great deal of planning to be able to read clearly from a distance.

வேறு சில அறிய தகவல்கள்:

 • புத்தகத்தில் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு – 1812
 • திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
 • மொத்தம் உள்ள அதிகாரங்கள் – 133
 • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
 • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
 • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
 • அதிகாரத்திற்கு பத்து விதம் மொத்தம் 1330 குறட்பாக்கள்
 • திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
 • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
 • திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
 • திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
 • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
 • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
 • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
 • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
 • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
 • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.
 • திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
 • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
 • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
 • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
 • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
 • திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
 • திருக்குறளில் “கோடி“ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
 • “எழுபது கோடி“ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
 • “ஏழு“ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
 • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
 • திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
 • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
 • திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

There are some information:

 • The book was first printed in the year 1812
 • First name of thirukural is – Muppal
 • There are 133 athikarangal in thirukural
 • There are 380 kuralgal in arathupal
 • There are 700 kuralgal in porutpal
 • There are 250 kuralgal in kamathupal
 • A total of 10 kural per athikaram
 • Total words in thirukural are -14000
 • Total letters in thirukural are-42,194
 • Of the 247 Tamil letters in Thirukkural, only 37 are not included.
 • The two flowers in thirukural- Anicham, kuvalai
 • The only fruits in thirukural is- Neruncippalam
 • The only seed in thirukkural – Kunrimani
 • The only vowels not used in the scriptures – z
 • The only athikarangal that comes twice in thirukkural - Kuripparithal
 • Two trees featured in Thirukural - palm and bamboo.
 • The most frequently used (1705) syllable in the thirukural –Q
 • Two characters used only once in thirukural- Li, Na
 • Two words that do not occur in thirukural - Tamil, kadavul (God)
 • The first source of Thirukural- Thanjavur, Gnanaprakasar
 • First explaination given by copulatet is- G.U.Pope
 • Among the dialogueists in thirukural 10th scriptwriter- Parimelazhagar
 • The word "crore" is found in Thirukkural in seven places
 • The word "seventy crore" is contained in a single letter.
 • The word "seven" is taken up in eight athikarangal.
 • The only number that does not occur in Tirukkural- 9
 • Tirukural has been released in 26 languages so far.
 • Thirukurali has been translated into English by 40 people.
 • Thirukural is translated into “Wakrapoli” language spoken by Narikurvar.

இத்தனை சிறப்புவாய்ந்த திருக்குறளை நாமும் கற்று, நம் அடுத்த தலைமுறைக்கும் அதன் கருத்துகளை கொண்டுசேர்த்து அதன் வழி நடக்க உறுதியேற்போம்.

We have learned so much about Thirukural and we are determined to taking a part in our next generation.Related Products

Made in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.