எங்கள் வில்வா ஆடைகள் பற்றி வெளியான கட்டுரை


இனிக்கும் தமிழில் ஆடைகள் வழங்கும்"வில்வா தமிழ் ஆடைகள்"பற்றி தினசரி நாளிதழ், வாரஇதழ், தொழில் தொடர்பான இதழ்களில் எழுதி உள்ளனர், இதனை தவிர ஆன்லைனில்(online) பல இணையதளத்தில் எழுதி வருகின்றனர், அவ்வாறு நமக்கு முதன்முதலில் அங்கீகாரம் அளித்து வளர்தொழில் இதழில் வெளிவந்த செய்திகளை இங்கு காண்போம். ஏன், எதற்காக தமிழ் ஆடைகள் தயாரித்து வருகிறோம், என்ன அவசியம் தமிழில் ஆடைகள் உருவாக்க என பல கேள்விகள் பல்வேறு காலகட்டத்தில் பலர் கேட்டதுண்டு, வளர் தொழில் இதழ் எழுத்தாளர் நம்மை சந்திக்க வந்ததும் கேட்டதும் அதே கேள்வியே, "தமிழ் ஆடைகள் ஏன் தயாரிக்கும் எண்ணம் வந்தது'' என வில்வா தமிழ் ஆடைகள் பற்றி முழுவதுமாக தங்கள் "டிசம்பர் 2015" இதழில் பதிவிட்டனர். அதற்கு அக்குழுவினர்க்கு முதலில் நன்றி. வளர் தொழில் பத்திரிகையில் வில்வா தமிழ் ஆடைகள் பற்றிய செய்தி வந்தது வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

"ஏன் தமிழில் ஆடைகள் அணிய வேண்டும்?"

 

 

 

"தமிழையும்

தமிழ் கலைகளையும்

உலகம் முழுக்கக் கொண்டு சேர்க்க வேண்டும்"

 

"வில்வா தமிழ் ஆடைகளின்" ஒரே குறிக்கோள் அதற்கு முதல் உத்திட்டது "தமிழ் ஆடைகள்". தமிழ் ஆடைகளில் நல்ல வாசகங்கள், பாரதி, வள்ளுவரின் படைப்புகள், பெரிய தமிழ் தலைவர்களின் படங்களையும் உலகம் முழுக்க ஆடைகளாக கொண்டு சேர்க்க வேண்டும்.

 

"சிங்கப்பூரிலும் தமிழ் ஆடைகள்

அமோக விற்பனை"

 

இந்தியாவின் பெரிய கோவிலான தஞ்சை பெரியகோவிலை அளித்த இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டு விழா சிங்கப்பூர் தமிழர்களால் பெரிதாக கொண்டாடப்பட்டது, அந்த அரங்கில் விற்பனை அரங்கம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது, சிங்கப்பூரில் தமிழ் ஆடைகள் பெரியதாக வரவேற்த்தனர், "திருவள்ளூர், இராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவில்" என பல படங்கள் பொறித்த ஆடைகள் தயாரித்து விற்பனை தொடங்கினோம். அன்று முதல் இன்று வரை இந்தியா மட்டுமின்றி தமிழ் ஆடைகள் இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ் முதலான நாடுகளில் கொண்டு சேர்த்து வருகிறோம்.

 

 

நன்றி: ஆ.வீ. முத்துப்பாண்டி