இயற்றியவர்: கணியன் பூங்குன்றனார்
நூல்: புறநானூறு - 192 காலம்: சங்க காலம்

நம் தமிழ் மக்கள் தமது சாதனைக்காக அல்லது பேச்சாற்றலுக்காக தகுதிபெற்று வெளி மாநிலங்கத்திற்கோ வெளி நாட்டிற்கோ மேடையில் ஏறி பேச சென்றால் இந்த பாடல் வரியை மேற்கோள் காட்ட தவறுவது கிடையாது. அந்த அளவிற்கு அருமையான கருத்துக்கள் பெற்றது புறநானூற்றில் இடம்பெற்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல், ஆனால் இந்த பாடலின் ஒரு வரியை மட்டுமே மேற்கோள் காட்டி விட்டு வேறு கருத்துக்களை பேச தொடங்கி விடுவர். இப்படி பேசுவபவர்கள் மற்றும் நாம் என ஒரு ஒருவராவது இந்த பழந்தமிழ் பாடலின் முழுமையான கருத்தினை படித்திருப்பார்களா என்று சிந்தித்த தருணமே இந்த கட்டுரை.

 

ஐரோப்பா மாநாட்டில் APJ அப்துல் காலம்:

இளைஞர்களின் நம்பிக்கையாக வாழ்ந்து அண்மையில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் அறிவியல் உலகின் தந்தையுமான பாரத இரத்தினா உயர்திரு APJ அப்துல் காலம் அவர்கள் கூட தமது ஐரோப்பிய மாநாட்டில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என மேற்கோள் காட்டி பேசி இருப்பார். அந்த பாடலின் முழுமையான பொருளை பாப்போம்.

 

 

 

192- வது புறநானூற்று பாடல்

கணியன் பூங்குன்றனாரின் இந்த பாடல் தமிழர் பண்பாட்டையும் அறிவியலையும் மதத்தையும் முழுமையாக எடுத்துரைக்கிறது. புறநானூற்றில் இடம் பெற்ற 192 - வது பாடல்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

 

தமிழ் பொருள்:

 

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

 

முழு விளக்கம்:

 • உலக ஒற்றுமையை ஒரு வரியில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என கூறி இருக்கிறார். உலகில் உள்ள அனைத்து ஊரும் ஏன் ஊர்; அனைத்து மக்களும் ஏன் உறவினர் என்பது இதன் விளக்கம். பக்கத்துக்கு மாநிலம் ஏன் பக்கத்துக்கு வீட்டில் கூட சண்டை போடும் நிலை இப்போது இருக்க; சங்க காலத்திலே உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ கூறுவது சிறப்பே!
 • நமக்கு நன்மையையும் தீமையும் அடுத்தவர் தருவதில்லை ஏன் துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை. நாம் செய்த செயலின் பயனையே நாம் அடைகிறோம். ஒருவற்கு நன்மை செய்தல் நமக்கும் நன்மை நாடாகும் அதுவே தீமை நினைத்தாலே போதும் நமக்கும் தீமை வந்தடையும். இதனையும் ஒரே வரியில் "தீதும் நன்றும் பிறர் தரவாரா" என்றுள்ளார்.

 • இறப்பு ஒன்றும் புதிது அல்ல துன்பப்பட; வாழ்வதும் இன்பம் என மகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை. பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை
 • மழை எப்படி உருவாகின்றது என்ற ஒரு அறிவியல் கூற்றை இந்த பாடலில் எதார்த்தமாக கூறியுள்ளார். நீராவியாகுதல் என்ற அறிவியல் கோட்பாட்டை மேகமானது கடல் வழியாக வந்து மழைநீரை எடுத்து கொண்டு போவதை போல நம் வாழ்வும் உள்ளது என அருமையாக கூறியுள்ளார்.

 • தகுதியுடையர்கள் கற்றுக்கொடுத்ததை வைத்து நாம் வாழ்வில் தேர்ந்துள்ளோம் , ஆகா நம்மை விட பெரிய இடத்தில் இருப்பவர்களை நாம் தலை மேல் தூக்கி வைக்கவும் தேவையில்லை நம்மை விட சிறியவர்களை காலில் போட்டு மிதிக்கவும் தேவையில்லை. அதுவே வாழ்வில் கற்றவர்க்குரிய பண்பாகும்.

முடிவுரை:

இன்னலுக்கு பிறகு தானே இன்பம்; வாழ்க்கையின் துன்பங்கள் இன்பங்கள் எல்லாம் முன்னரே நிர்ணயிக்க பட்டதே; நம் எண்ணம் போல நம் வாழ்க்கை அமையும். சங்க கால பாடல்கள் பல நமது வாழ்வின் அறநெறிகளை மிக அருமையாக விளக்குகிறது. நாம் அதனை நம் வாழ்வில் எடுத்துக்கொள்வது அவசியம் ஆகிறது

 

English Version:

To us all towns are one, all men our kin,
Life's good comes not from others' gifts, nor ill,
Man's pains and pain's relief are from within,
Death's no new thing, nor do our bosoms thrill
When joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much-praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightning's flash from darkened skies.
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise!
We marvel not at the greatness of the great;
Still less despise we men of low estate.

 

 

 

 

 

Meaning:

 • Every village is my village and every person is from my relative.
 • Like a lot of things in life good and bad doesn't come from others.They come from within us.
 • Likewise, sorrow or pain and relief of the pain doesn't come from others.They also come from within us.
 • Death is not unheard of or new. It unnecessary to rejoice that life is sweet or complain in anger that life is bitter.
 • Like rafts drifting along in the rapids of a great river, dashing over the rocks after a downpour (from skies resounding with thunder and lightning), our lives, no matter how dear, follows its own course(nature).
 • We know this from the vision of wise seers who can see.
 • So, we are neither awestruck by the great nor do we belittle the ‘not so great’.
Watch our Exclusive video on Yaadhum Oore